Saturday, June 12, 2010

இணையத்தில் பாதுகாப்பாக சஞ்ஞாரிப்பது எப்படி என்பதை யாஹூ சொல்கிறது


          
இணையதள பாவைனை தற்போது அனைத்து மட்டங்களிலும் அதிகரித்து வருகின்றது. மனிதர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த இணைய உலகம் அபிவிருத்தி அடைந்துள்ளது. இது ஒரு பக்கம் சாதகமாக் இருந்தாலும் இங்கும் களவு , கற்பழிப்பு , ஏமாற்று வேலைகள் போன்றன இடம்பெறுகின்றது என்பது கவலைக்குரிய விடயமே. தற்போது அதிகமாக சமூக வலைத்தளங்கள் தொடர்பாக புதிய புதிய சர்ச்சைகள் தோன்றியுள்ளது. இப்படி அனைத்து வகையான பாதுகாப்பு பிரச்சினைக்கும் தீர்வு வழங்கும் பொருட்டு ஒரு இணையதளம் யாஹூ (yahoo) நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.


             இங்கு பலவகையான விடயங்கள் பலதரப்பட்ட கோணங்களிலும் அவதானிக்கப்பட்டு அதற்கான விபரங்களும் தரப்பட்டுள்ளது. எழுத்து வடிவிலும் வீடியோ வடிவிலும் பல விபரங்கள் தரப்பட்டுள்ளது.  குறிப்பாக பெற்றோர்கள் எவ்வாறு தனது பிள்ளைகளின் இணையப்பாவனையில் செல்வாக்குச் செலுத்த வேண்டும், எவ்வாறு அவர்களை வழிநடத்த வேண்டும் என்று சிறந்த முறையில் விபரிக்கப்பட்டுள்ளது.

               சமூக வலைத்தளம் ஒன்றில் எப்படி பாதுகாப்பாக சஞ்ஞாரிப்பது என்பது தொடர்பாக யாஹூ வெளியிட்டுள்ள கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளது.
  • Know your connections :- நீங்கள் தொடர்புவைத்திருக்கும் நபர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் மிகச் சிறந்தது. முகந்தெரிந்தவரை மாத்திரம் உங்கள் நண்பராக நண்பியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • Think before you post :- நீங்கள் ஏதாவது எழுதவோ பகிரவோ நினைத்தால் நின்று நிதானித்து யோசித்து செயற்படவும். நீங்கள் பகிர்ந்த தகவலை நீங்கள் மீண்டும் திருப்பி பெற முடியாதென்பதை கவனத்தில் கொள்ளவும். உதாரணமாக நண்பரிடம் பகிர்வதை ஆசிரியரிடம் சொல்ல முடியாது. நண்பரிடம் சொல்வதை முதலாழியிடம் சொல்ல முடியாது.  இப்படி இருக்கும் போது எல்லோரையும் குழுவாக வைத்துக் கொண்டு சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாம்.
  • Protect your personal information :- உங்கள் தொடர்பான தனிப்பட்ட விடயங்களை உலகம் பார்க்கும் அளவுக்கு பிரசுரிக்க வேண்டாம். e-mail முகவரியாயினும் தவிர்ப்பது சிறந்தது.  
  • Configure your setting :- குறித்த இணையதளம் தொடர்பாக இருக்கும் அனைத்து settings களையும் தேடிக் கற்றுக்கொள்ளவும். 
         பெற்றோர்களுக்கும் பலவகையான அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளது. குறிப்பாக கண்ணனி வைக்கும் இடம், அவர்களின் இணையப்பாவனையை கண்காணிப்பது என்று பலவகையான விடயங்கள் தரப்பட்டுள்ளது.

              இது த்டர்பான மேலதிக தகவல்களை அறிய இந்த தளத்துக்கு செல்லவும்.
    yahoo safely


              

    Retweet this

    Wednesday, June 9, 2010

    மேம்படுத்தப்பட்ட gmail chat அறிமுகம்.


              
    எவ்வளவுதான் chating இணைய தளங்கள், chating மென்பொருள்கள் இருந்தாலும் gmail chat க்கு இணையாக வரமுடியாது. இலகுவான gmail chat இன்னும் இலகுவாகவும் மேம்பாட்டுடனும் வெளியாகி உள்ளது.

                email முகவரியை click செய்து தோன்றும் பெட்டியில் chating செய்வது வழக்கம். voice அல்லது video chat என்றால் முன்பெல்லாம் பெட்டியில் காணப்படும் லின்க்(link) இனை க்ளிக்(click) செய்து அரட்டை அடித்து வந்தோம். ஆனால் தற்போது வீடியோ மற்றும் வொய்ஸ் அரட்டைக்கு மெனு வடிவில் வடிவமைக்க்கப்பட்ட புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


               பெரிய மாற்றம் இல்லாவிடினும் அழகாகவும் இலகுவாகவும் உள்ளது 

    Retweet this

    Youtube மூலம் பணம் சம்பாதிக்க


              
    உலகில் உள்ள மிகப் பிரபலமான இணையதளங்களில் youtube.com ம் ஒன்று.வீடியோக்களை பார்க்கவும் அதனை சேமித்து வைக்கவும் ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ளவும் இது உதவி செய்கின்றது. Youtube இணையதளம் தற்போது பணம் சம்பாதிக்கும் வழிமுறையினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. நம்பிக்கையுடன் இறங்கி வேலை செய்தால் நிச்சயம் பணம் சம்பாதிக்கலாம். 

    01. இந்த புதிய சேவையின் பெயர் என்ன?
               youtube partner program.

    02. எவ்வாறு youtube மூலம் பணம் சம்பாதிக்க முடியும்?
                   நீங்கள் youtube தளத்தில் upload செய்யும் வீடியோக்களில் விளம்பரங்களை பிரசுரிப்பதன் மூலமும் அடுத்தது உங்கள் வீடியோக்களை வாடகைக்கு விடுவதன் மூலமும் சம்பாதிக்ககூடியதாக இருக்கும்.

    03.   இங்கு பார்ட்னராக(partner) இணைவதற்கான தகமைகள் என்ன?
    •  உங்களது சொந்த படைப்பாக இருக்கவேண்டும். நீங்கள் upload செய்யும்     வீடியோ உங்கள் உங்கள் உற்பத்தியாக இருக்க வேண்டும். ஏனையோருக்கு சொந்தமான பாடல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படாது.
    • நீங்கள் தொடர்ச்சியாக வீடியோக்களை வழங்குபவராக இருக்க வேண்டும்.
    • நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாதுகாவலரை கொண்டும் இங்கு இணையலாம்.
    • விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கு முறைக்கு ஏற்பவே பரிசீலிக்கப்படும். 
    03. பார்ட்னர்களில் ஏதும் பிரிவு உள்ளதா?
            ஆம். இரண்டு வகையான பார்ட்னர் பிரிவு உள்ளது.
    1. Account level :- தொடர்ச்சியாக வீடியோக்களை upload செய்பவர்கள் இங்கு உள்ளடக்கப்படும். மேலும் அதிக வருகைகளை பதிவு செய்த வீடியோக்களின் உரிமையாளர்களும் உள்ளடக்கப்படும். 
    2. Individual  level :- ஒரு குறித்த வீடியோ அதிக வருகைகளை பதிவு செய்திருக்கும் வீடியோக்கள். அதாவது குழந்தைகளின் சில்மிசம்கள். அல்லது ஒருவர் வழுக்கி விழுந்த காட்சி. நாயும் பூனையும் விளையாடும் காட்சி. இப்படியான வீடியோக்களும் இங்கு சேர்த்துக்கொள்ளப்படும்.
    04. அமெரிக்காவில் மட்டும் தானா இது செயற்படும்?
    •  இல்லை.  இது தற்போது 14 நாடுகளில் செயற்படிகிறது. அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜபான், மெக்சிக்கோ, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா.

              இலங்கை , இந்தியா போன்ற நாடுகளுக்கு இன்னும் வழங்கப்படாவிடினும் எமது தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளில் இது செயற்படுகின்றது. மிக விரைவில் இது உலகம் பூராகவும் செயற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கிடைக்கும் வருமானத்தில் youtube ற்கும் பங்கு உள்ளது தானே. 

          உங்களது விண்ணப்பங்களை அனுப்ப இந்த முகவரியை நாடவும் http://www.youtube.com/partners . மேலதிக விபரங்களுக்கு http://www.google.com/support/youtube/bin/topic.py?topic=12632


          

    Retweet this

    Tuesday, June 8, 2010

    கூகிளிடமிருந்து புதிய இரண்டு சேவைகள்


                கூகிள் மெப்ஸ்(google maps),  கூகிள் பஸ்(google buzz),  ஜிமைல்(gmail) என்பவற்றின் கலவையாகவே இந்த புதிய சேவை அமைந்துள்ளது. நமது நண்பர்களின் ஊரையோ அல்லது அவர்களின் வீட்டுக்கு செல்லும் பாதையையோ அல்லது அவர்களின் வீட்டையோ தேடி அலைய வேண்டிய சிரமத்தை கூகிள் மெப்ஸ்(maps) நமக்கு போக்கியது. தற்போது குறித்த ஒரு அமைவிடத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையை கூகிள் இலகுவாக்கித்தந்துள்ளது.



               முன்பெல்லாம் ஒரு இடத்தை கூகிள் மெப்ஸ்(maps) மூலம் நமது நண்பர்களுக்கு காட்ட வேண்டுமானால், அந்த மெப் ன் லின்க்கினை(link) எடுத்து மைல்(mail) பண்ணுவோம்.அந்த லின்கினை கிளிக்(click) செய்து அந்த இடத்தை பார்க்கக் கூடியதாக இருந்தது ஆனால் தற்போது எமது inbox ல் வைத்தே பார்க்க கூடியதாக இருக்கும். இதனை செயற்படுத்த gmail setting ற்கு சென்று Labs என்பதை க்ளிக் செய்து  Google Maps previews in mail என்பதை enable செய்து save பண்ணிக்கொள்ளவும்.


           அடுத்தது google buzz ல் மெப்ஸ் இனை சேர்த்துக்கொள்ளல். நீங்கள் பகிரப்போகும் மெப்ஸ் ன் லின்கினை எடுத்து paste செய்து கொண்டால் போதும். google maps இனி google buzz இலும் தெரியும்.

    we love your feedback 
     

    Retweet this

    Sunday, June 6, 2010

    இரண்டு மாதத்திற்குள் இரண்டு மில்லியன் ipad விற்பனை


             
    இரண்டு மாதத்திற்குள் இரண்டு மில்லியன் ipad விற்றுற்தீர்ந்து விட்டதாக apple நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த april மாதம் apple தனது புதிய ipad இனை சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.இந்த ipad மூலம் இணையதள பாவனை, மின்னஞ்ஞல் பாவனை, பாடல் கேட்கும் வசதி, வீடியோக்களை பார்க்கும் வசதி, வீடியோ கேம்(game) வசதி, புத்தகங்களை வாசிக்கும் வசதி என்று பலவசதிகள் காணப்படுகிறது.

            ஒரு சில நாடுகளில் மட்டுமே விற்பனையாகும் இந்த ipad இன் விநியோகம் மேலும் பல நாடுகளுக்கு மிக விரைவில் விஸ்தரிக்க
    -ப்படவுள்ளது. அண்மையில் அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜபான், ஸ்பைன், சுவிட்சலாந் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

            உங்களுக்கு இந்த ipad தொடர்பாக ஏதும் தெரிந்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

    Retweet this

    Saturday, June 5, 2010

    விற்பனைக்குவந்துள்ள கூகிள் T-சேர்ட்


      
      பிரபல்யங்களின் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களை பாவிப்பதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கூகிள் நிறுவனம் அவர்களின் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களை சந்தைக்கு விடுவது வழக்கம். புதிதாக அவர்கள் சந்தைக்கு விட்டிருப்பது GMAIL சின்னம் பொறிக்கப்பட்ட T-Shirt. பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. விலைதான் சற்று அதிகம். அண்ணளவாக 42 அமெரிக்க டொலர்.

           வசதி இருந்தால் நீங்களும் வாங்கி அணிந்து கொள்ளுங்கள். தற்போது google store ல் அந்த T-சேர்ட்டினை வாங்கிக் கொள்ளலாம். மேலும் சில google உற்பத்திகளின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

    google cap

    Youtube pen

    Google Bag



    Google wave t-shirt



    Youtube t-shirt





    Retweet this

    Thursday, June 3, 2010

    உங்கள் விருப்பத்திற்கேற்ப மாறும் கூகிள்(google)


     
    எல்லோருக்கும் பிடித்தமான கூகிளின் home page இனை நமது விருப்பத்திற்கு ஏற்ப அழகுபடுத்திக்கொள்ளலாம். அதாவது எமக்கு விருப்பமான படத்தினை background ஆகா நிறுவிக்கொள்ளலாம். இங்கு நமது கணணியில் இருக்கும் படத்தினையோ அல்லது உங்களது பிகாசா அல்பத்திலிருக்கும் படத்தினையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

        இதனை உங்கள் கூகிளிலும் செயற்படுத்த விரும்பினால் google.com சென்று, அங்கு இடது பக்க கீழ் மூலையில் காணப்படும் link இனை க்ளிக் செய்து , உங்களுக்கு விருப்பமான படத்தினை நிறுவிக் கொள்ளலாம்.

        உங்களது home page ல் அவ்வாறான link காணப்படின் சற்று காத்திருக்கச் சொல்லியிருக்கிறது கூகிள் நிறுவனம். மிக விரைவில் நம் எல்லோரையும் இந்த சேவை வந்தடையும் என்பதில் எந்த சந்தேகமமுமில்லை.

    Retweet this

    Wednesday, June 2, 2010

    பாகிஸ்தான் + முகப்புத்தகம் (facebook)



      முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹுவசல்லம்) அவர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களையும் படங்களையும் கொண்டிருந்ததனால் facebook இணைய தளம் பாகிஸ்தானில் கடந்த மாதம் தடைசெய்யப்பட்டது.

      முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹுவசல்லம்) தொடர்பாக நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியை facebook நீக்கியதை  அடுத்து facebook க்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

      இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி  Ejaz Ahmed Chaudhry மேலும் கூறுகையில் “மதரீதியில் புனிதமானவிடயங்களை அவமதிக்கும் இணைய தளங்களை சவூதி அரேபியா போன்ற நாடுகள் எவ்வாறு தொழிநுட்ப ரீதியில் தடுக்கின்றதோ, அவ்வாறான System களை உருவாக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்”

      இப்படியான சமூக வலைத்தளங்களை நல்ல விடயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள். எந்த ஒரு மதத்தையும் கொச்சைப்படுத்துவதற்கு இப்படியான தளங்களை பயன்படுத்த வேண்டாம்.  ஒது எனது பணிவான வேண்டுகோள்.
    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    Monday, May 31, 2010

    பங்களாதேசில் முகப்புத்தகத்திற்கு(facebook) தடை


     
    அண்மைக் காலமாக facebook இணைய தளத்தில் இஸ்லாமிய மததிற்கு எதிரான விடயங்கள் பரப்பட்டுவருகின்றதாகுவும் முஹம்மது நபியை(ஸல்லல்லாஹு அலைவஸல்லம்) கேலிப்படுத்தும் வகையில் பல படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பங்களாதேஸ் அரசாங்கம் facebook இணைய தளத்தின் பாவனையை தடை செய்துள்ளது.

      மேலும் பங்களாதேஸ் அரசியல் தலைவர்களை கேலிசெய்யும் வகையில் பல போட்டோக்கள்(photo) பிரசுரிக்கப்பட்டுள்ளதாகும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக தடை என்றும் இந்த போட்டக்களை facebook நீக்குமிடத்து இந்த தடை அகற்றப்படலாம் என்றும் பங்களாதேஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

     facebook இணையதளத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் அரசாங்கமும் facebook இணைய தளத்தை கடந்த ஒரு சில வாரத்திற்கு முன் தடை செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது..

    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    Sunday, May 30, 2010

    மேம்படுத்தப்பட்ட yahoo தேடுபொறிகள்


    yahoo நிறுவனத்தின் yahoo search இன்னும் ஒரு புதிய வசதியுடன் எமது விரல்களுக்கு.அதாவது தற்போது எந்த  image or video பிரபலமாக உள்ளது அல்லது எந்த image or video பலராலும் தேடப்பட்டு வருகின்றது என்பதை yahoo image search , yahoo video search அழகாகவும் தெளிவாகவும் எமக்கு காட்சிப்படுத்துகின்றது.


      இதன் மூலம் நமக்கு பரீட்சையமில்லாத பல விடையத்தினை காணக்கூடியதாகவும்,அன்றாட இணையப் பாவனையாளர்களின் போக்கினையும் அறிந்து கொள்வதோடு எங்களை update செய்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.


      நீங்கள் yahoo image or yahoo video search இனை பயன்படுத்தும் போது அங்கு தோன்றும்"see what's TRENDING NOW on the image search homepage" என்பதை க்ளிக் செய்து தற்போதைய trend ஐ நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .



    Retweet this

    Saturday, May 29, 2010

    ஓராண்டு பூர்த்தியை கொண்டாடிய google wave


        பிரமிக்க வைத்த கூகிள் வேவ்(google wave) ற்கு கடந்த 28ம் திகதி ஒரு வயதாகியது. கடந்த வருடம் May 28ம் திகதி எங்களில் சிலருக்கு அறிமுகமான google wave இப்போது அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலருக்கு புரியாவிட்டாலும் சிலருக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ள இந்த google wave இனை நீங்களும் பயன்படுத்த விரும்பினால் இந்த தொடுப்பை http://wave.google.com க்ளிக் செய்து பரீட்சித்து பாருங்கள்.


    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    Sunday, May 2, 2010

    புதிய facebook Event



     

            எமது நிகழ்வுகளை இலகுவாக ஏனையோருக்கு தெரியப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் நண்பர்களை அந்த நிகழ்வுகளுக்கு அழைக்கவும் facebook event பெரிதும் உதவியாக விளங்கிவருகின்றது. எமது முக்கிய நிகழ்வுகளை இப்பொழுது இலகுவாக உருவாக்கிக் கொள்ளும் வகையில் facebook தனது events இனை விருத்தி செய்துள்ளது.

         இப்பொழுது எமது facebook home page ல் புதிதாக event box ஒன்று தமது வலது பக்கத்தில் தோன்றும். அங்கு காணப்படும் "what are you planning" எனும் பகுதியில் தமது நிகழ்வுகளை type செய்வதன் மூலம் எங்கள் நிகழ்வுகளை இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம்.

         இதற்கு மேலதிகமாக public event, private event என்றும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. public event எனும் போது அனைவரும் காணக்கூடியதாகவும் private event எனும் பொழுது நாம் அழைத்தவர் மட்டும் காணக்கூடியதாகவும் காணப்படுகிறது.

         நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்திடுங்கள்

    Retweet this

    Saturday, May 1, 2010

    youtube ல் தெரியும் மாற்றங்கள்


         youtube இணைய தளத்தில் இவ்வார காலப்பகுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய விடயங்ளிலிருந்து எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் சில விடயங்களை இந்தப் பதிவினூடாக காணக்கூடியதாக இருக்கும்.

    01. Share with buzz and blogger


             youtube வீடியோக்களை இலகுவாக blogger , buzz ல் பகிர்ந்து கொள்ளும் வகையில் இரண்டு button கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த button களை click செய்து , youtube வீடியோக்களை இலகுவாக பகிர்ந்து கொள்ளலாம்.

    02. video player மாற்றப்பட்டுள்ளது.

                 youtube வீடியோக்களை தற்போது விளம்பரங்கள் இல்லாமல் கண்டுகளிக்ககூடியதாக இருக்கும்.இதனைவிட வடிமைப்பிலும் சில மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.

    03. Email Alerts

             இப்பொழுது நீங்கள் subscribe பண்ணியுள்ள channel கள் இற்றைப் படுத்தப்படும் பொழுது, email மூலம் நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். இதன் மூலம் அடிக்கடி நாம் youtube channel களை check பண்ணும் நேரத்தை சேமிக்கலாம்.

    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    தமிழுக்கு வாக்களிப்போம்



    மக்கள் தனது சொந்த மொழியில் தேடு பொறியினை(search engine) பயன்படுத்த விரும்புகிறார்கள் என google நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றது.எனவேதான் google தான் அறிமுகப்படுத்திய ஒலியியல் திரை விசைப் பலகையினை தனது தேடு பொறியில் பயன்படுத்தக்கூடிய வகையில் நிறுவியுள்ளது. தமிழ் மொழி இன்னமும் இந்த சேவைக்கு உள்வாங்கப் படவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

      அதாவது நாம் ஆங்கிலத்தில் ”amma” என type செய்யும் போது ”அம்மா” என வரும் சேவை.


      உள்ளூர் மொழிகளில் google தேடுதல்களை மேற்கொள்ளும் போது, அங்கு காணப்படும் சிறிய keyboard icon ஐ click செய்து நமது சொந்த மொழிகளை type செய்து கொள்ளலாம். உதாரணமாக ஹிந்தி மொழியில் தேடுதலை மேற்கொள்ள இந்த linkஐ click செய்யவும்.
    http://www.google.co.in/webhp?hl=hi

    தமிழ் மொழிக்கு இந்த சேவை தற்போது வழங்கப்படாத போதிலும் நாம் நமது வாக்குளை பிரயோகித்து இதனை பெற்றுக்கொள்ளலாம். எனவெ இந்த நிமிடமே நமது வாக்குகளை தமிழுக்கு வழங்குவோம்.
     
    http://spreadsheets.google.com/viewform?formkey=dHBoYWc3TFdCNm1mLTVVZzVfUWF2cWc6MQ 

    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .
     

    Retweet this

    Friday, April 30, 2010

    அண்மைக் காலத்தில் google வெளியிட்டுள்ள வீடியோக்கள்


    1. Google chrome தொடர்பானது



    2. Google earth தொடர்பானது





    3. youtube நடத்தவிருக்கும் போட்டி தொடர்பானது.



    4.Google Analytic தொடர்பானது



    5. செல்பேசியிலான google image search தொடர்பானது.



    6. google place தொடர்பானது



    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    வியாபாரத்தை வளர்க்க உதவிடும் facebook



    facebook எனும் போது அதிகமானோர்க்கு நினைவில் வருவது comments , chat , friend request , games என்பதே.ஆனால் இங்கு அரட்டை அடிப்பதற்கு மேலாக வெறு பல நன்மயான விடயங்களும் உள்ளன்.விசேடமாக எமது வணிகத்தை விருத்தி செய்ய இந்த facebook நிறையவே உதவுகிறது.

        வணிகம்(business)  சந்தயில் நிலைத்து நிற்க எமது வாடிக்கையாளர் களுடனான உறவு சிறந்த முறையில் பேணப்பட வேண்டும். அவர்களின் குறை நிறைகளை அறிய வேண்டும். அமது உற்பத்தி தொடர்பான அவர்களது கருத்துக்களை பெற வேண்டும்.இவை அனைத்தையும் இலகுவாக இந்த facebookல் நிறைவேற்றிக்கொள்ளாலாம். 


       நமது வணிக்கத்திற்கென ஒரு facebook pageஇனை உருவாக்கி, அங்கு  வாடிக்கையாளர்களை இணைத்து , அவர்களுடனான கருத்து பரிமாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் சிறந்த உறவினை பேணிக் கொள்ளலாம். இங்கு வணிகம் தொடர்பான செய்திகளையும் புதிய உற்பத்திகளின் அறிமுகத்தினையும் விசேட மேம்படுத்தல் திட்டத்தினையும் பகிர்ந்து கொள்ள முடியும்.


      உலகில் அதிக சன நெரிசல் மிக்க மேலும் அதிக மனித மனித்தியாலங்கள் செலவிடப்படும் இடத்தில் எமது வணிகத்தை(business) காட்சிப்படுத்தி அதன் மூலம் எனது வணிகத்தை விருத்தி செய்து கொள்ளலாம். 


     நீங்கள் ஒரு சிறந்த வணிகரா? வாடிக்கையாளர்கள் மீது அக்கரை கொண்டவரா? வாடிக்கையாளர்தான் எமது பலம் என நம்புகிறீரா? இனறே ஒரு facebook fan page இனை இலவசமாக உருவாக்கி வணிகத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள். 
    http://www.facebook.com/pages/create.php


    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    Wednesday, April 28, 2010

    Google தரும் “similar”



       தேடுபொறிகளில் முதல் நிலைவகிக்கும் google, தனது பாவனையாளர்களுக்கு இன்னுமொரு வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.google search results பக்கத்தில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் “similar” என்பதை பயன்படுத்தி, ஒரு இணைய தளத்திற்கு ஒத்த அல்லது சமனான தளங்களை பட்டியலிட்டு காட்டுகின்றது.

       இந்தச் சேவையை பயன்படுத்தி எமக்கு பிடித்தமான ஒரு விடயத்துடன் தொடர்புடைய புதிய புதிய இணைய தளங்களை அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.உதாரணமாக Cricket தொடர்பான இணைய தளங்களில் எமக்கு cricinfo வை மாத்திரந்தான் தெரியும் என வைத்துக்கொள்வோம். இந்த cricinfo க்கு ஒத்த சமனான தளங்களை அறிய வேண்டுமாயின், cricinfo என்று googleல் தேடி, அங்கு cricinfo என்ற தளமுகவரிக்கு அருகில் காணப்படும் “similar” என்பதை click செய்வதன் மூலம் cricinfoக்கு ஒத்த இணைய தளங்களை அறிந்து கொள்ளலாம்.

       இந்த வசதி எமக்கு பல புதிய இணைய தளங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய வசதி தொடர்பான உங்கள் கருத்துக்களை எங்களுக்கு சொல்ல மறக்க வேண்டாம்.

    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    Yahoo + English Premier League




    yahooல் இனி English Premier League.Yahoo நிறுவனமானது 2010-2013க்கான English Premier League ன் Highlights ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. போட்டி முடிவடைந்து வரும் ஞாயிறு நள்ளிரவிலிருந்து www.yahoo.co.uk எனும் முகவரியினூடாக இந்த வீடியோக்களை கண்டுகளிக்கலாம். ஒவ்வொரு போட்டியின் வீடியோவும் 5 நிமிடங்கள் கொண்டதாக அமையும். இது yahoo பாவனையாளர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் நன்மையளிக்கும் என்று yahoo தெரிவித்துள்ளது. 

    Retweet this

    Tuesday, April 27, 2010

    புத்தம் புதிய Nokia N8



    Nokia நிறுவனமானது தனது தனது புத்தம் புதிய N8 வகை செல்பேசியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. Symbian.3 இயங்குதளத்தைக் கொண்டு இயங்க இருக்கும் முதலாவது செல்பேசியாகும்.பல நவீன வசதிகளை உள்ளடக்கி வெளிவரவிருக்கும் இந்த Nokia N8, mobile phone பாவனையாளர்களுக்கு விருந்தாகவே அமையும்.


    இந்த N8 செல்பேசியானது 12-mega pixel cameraவை கொண்டிருக்கும்.மேலும் உயர் தரத்திலான video recording , video editingஐ கொண்டிருக்கும் இந்த N8 3.5inch HD touchscreen ஐ உள்ளடக்கியுள்ளது.


    HD தரத்திலான video , dolby digital plus sorround ஒலியமைப்பு என்று கலக்குகிறது.இந்த N8ல் காணப்படும் விசேட application மூலம் இணைய தொலைக்காட்சிகளை கண்டுகழிக்க கூடியதாகவும் இருக்கும்.

    மேலும் 16GB உள்ளக memory, 48GB வரை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகிறது.facebook , twitter updatesகளை முகப்பில் பார்க்கக்கூடிய வசதி என்று நீண்டு கொண்டே செல்கிறது.

    இந்த N8 இந்த ஆண்டில் 3வது காலாண்டில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று Nokia அறிவித்துள்ளது.இதன் அறிமுக விலை 370 யூரோக்கள் (வரிகள் சேர்க்கப்படவில்லை)


    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    Monday, April 26, 2010

    பிரபல இணைய தளங்களின் mobile பதிப்புக்கள்.


    உலகில் அதிகமாக பாவிக்கப்படும் இணைய தளங்களின் mobile versions இனை நாம் பட்டியலிட்டு இருக்கிறோம். இந்த முகவரிகளைக் கொண்டு எமது செல்பேசிகள் மூலம் இந்த இணைய தளங்களை பார்வையிடலாம்.இணைய வேகம் குறைந்த mobile phone பாவனையாளர்களுக்கு இந்த பதிப்புக்கள் மிக உதவியாக அமையும். 









    We love your feedback

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    Sunday, April 25, 2010

    Google Buzz தரும் 3 புதிய சேவைகள்


     Google தனது buzz சேவையினை மேலும் மேலும் மெருகூட்டி வருகிறது. தற்பொழுது 3 புதிய வசதியினை எங்களுக்கு வழங்கியுள்ளது.
    1.Deliver post to inbox

            எமக்கு பிடித்த ஒரு post தொடர்பான comments அல்லது updatesகளை எமது email inboxக்கு வரவைப்பதாகும். ஒவ்வொரு postன் வலது பக்க மூலையில் காணப்படும் comment என்பதை click செய்து Deliver to my inbox என்பதை click செய்வதன் மூலம் இதனை செயற்படுத்திக் கொள்ளலாம்.


    2.disable comment

           பழைய நமது postகளுக்கான comments இனை முடிவுக்கு கொண்டு வருவதாகும்.உதாரணமாக நீங்கள் 2 மாதத்திற்கு முன் ஆரம்பித்த postக்கு இன்னமும் comments வருகிறது என்றால், அதனை முடிவுறுத்திக்கொள்ள இது பயன்படும்.


    3.buzz button

          இணைய தள இணைப்புக்களை buzz மூலம் பகிர்ந்திட உதவும்.இதனை எமது தளத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கும். இந்த இணைப்பை click செய்து இந்த button ஐ பெற்றுக்கொள்ளலாம்.
    http://www.google.com/buzz/api/admin/configPostWidget

         facebook ஐ வெறுக்கும் உங்கள் நண்பர்களுக்கு google buzz பிடிக்கும் என்று நம்புகிறோம்.

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this

    முதல் 10 செய்தி வழங்கும் இணைய தளங்கள்(இலங்கை)



    இலங்கை மக்களால் அதிகமாக பார்க்கப்படும் செய்தித் தளங்களின் தரவரிசை பின்வருமாறு.அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருப்பது இலங்கை இணையதள தரவரிசை ஆகும்.
    7.www.dailynews.lk (52)

    பிரபல தமிழ் நாளேடுகளின் இணைய தளங்களின் தரவரிசை பின்வருமறு
    1.வீரகேசரி (282)
    2.தினகரன் (2145)
    3.தினக்குரல் (4820)

    what next?
    1.like it(top of the post)
    3.buzz it
    3.tweet it
    4.bookmark it .

    Retweet this