Wednesday, June 9, 2010

Youtube மூலம் பணம் சம்பாதிக்க


          
உலகில் உள்ள மிகப் பிரபலமான இணையதளங்களில் youtube.com ம் ஒன்று.வீடியோக்களை பார்க்கவும் அதனை சேமித்து வைக்கவும் ஏனையோரிடம் பகிர்ந்து கொள்ளவும் இது உதவி செய்கின்றது. Youtube இணையதளம் தற்போது பணம் சம்பாதிக்கும் வழிமுறையினையும் ஏற்படுத்தித் தந்துள்ளது. நம்பிக்கையுடன் இறங்கி வேலை செய்தால் நிச்சயம் பணம் சம்பாதிக்கலாம். 

01. இந்த புதிய சேவையின் பெயர் என்ன?
           youtube partner program.

02. எவ்வாறு youtube மூலம் பணம் சம்பாதிக்க முடியும்?
               நீங்கள் youtube தளத்தில் upload செய்யும் வீடியோக்களில் விளம்பரங்களை பிரசுரிப்பதன் மூலமும் அடுத்தது உங்கள் வீடியோக்களை வாடகைக்கு விடுவதன் மூலமும் சம்பாதிக்ககூடியதாக இருக்கும்.

03.   இங்கு பார்ட்னராக(partner) இணைவதற்கான தகமைகள் என்ன?
  •  உங்களது சொந்த படைப்பாக இருக்கவேண்டும். நீங்கள் upload செய்யும்     வீடியோ உங்கள் உங்கள் உற்பத்தியாக இருக்க வேண்டும். ஏனையோருக்கு சொந்தமான பாடல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் என்பன ஏற்றுக்கொள்ளப்படாது.
  • நீங்கள் தொடர்ச்சியாக வீடியோக்களை வழங்குபவராக இருக்க வேண்டும்.
  • நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட பாதுகாவலரை கொண்டும் இங்கு இணையலாம்.
  • விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கு முறைக்கு ஏற்பவே பரிசீலிக்கப்படும். 
03. பார்ட்னர்களில் ஏதும் பிரிவு உள்ளதா?
        ஆம். இரண்டு வகையான பார்ட்னர் பிரிவு உள்ளது.
  1. Account level :- தொடர்ச்சியாக வீடியோக்களை upload செய்பவர்கள் இங்கு உள்ளடக்கப்படும். மேலும் அதிக வருகைகளை பதிவு செய்த வீடியோக்களின் உரிமையாளர்களும் உள்ளடக்கப்படும். 
  2. Individual  level :- ஒரு குறித்த வீடியோ அதிக வருகைகளை பதிவு செய்திருக்கும் வீடியோக்கள். அதாவது குழந்தைகளின் சில்மிசம்கள். அல்லது ஒருவர் வழுக்கி விழுந்த காட்சி. நாயும் பூனையும் விளையாடும் காட்சி. இப்படியான வீடியோக்களும் இங்கு சேர்த்துக்கொள்ளப்படும்.
04. அமெரிக்காவில் மட்டும் தானா இது செயற்படும்?
  •  இல்லை.  இது தற்போது 14 நாடுகளில் செயற்படிகிறது. அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜபான், மெக்சிக்கோ, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா.

          இலங்கை , இந்தியா போன்ற நாடுகளுக்கு இன்னும் வழங்கப்படாவிடினும் எமது தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளில் இது செயற்படுகின்றது. மிக விரைவில் இது உலகம் பூராகவும் செயற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கிடைக்கும் வருமானத்தில் youtube ற்கும் பங்கு உள்ளது தானே. 

      உங்களது விண்ணப்பங்களை அனுப்ப இந்த முகவரியை நாடவும் http://www.youtube.com/partners . மேலதிக விபரங்களுக்கு http://www.google.com/support/youtube/bin/topic.py?topic=12632