Tuesday, August 25, 2009

ப்ளீஸ் மொபிடல்(MOBITEL) பளீஸ்


நானும் மொபிடல்தான் பாவிக்கிறன்.ரொம்ப
ச்சீப்(cheap)..இது எல்லாருக்கும் தெரியும்..எங்குட
கெம்பஸ்ல அதிகமானாக்கள் ஸ்மார்ட்தான்(SMART)..

நான் பாவிக்கிற சிம்தான்(SIM) கடும் ச்சீப் எங்குறத்தில
நம்பளுக்கு அப்படி ஒரு பெருமை(அப்பிடித்தானே?)


20/= கார்ட் வாங்கிப்போர்ர பாடு நம்பளுக்குத்தான்
தெரியும்..போன்ல காசில்லாட்டி தண்ணியும்
இறங்கமாட்டா..


ஒரு சின்ன கவலை...

சின்ன கோபமும்தான்..

மச்சான் 10/= ஒன்டு share பண்ணன் எண்டு நாம
சொன்னா...
அவன் சொல்ற பதில்தான் எரிச்சல்வாற..

மொபிடல்ல இருந்து நாம க்ரெடிட் share பண்ண
குறஞ்சது 33/= காசி நம்புட போன்ல இரிக்கொணுமாம்.
very bad... இந்த லிமிட் கொஞ்சம் கூடத்தான்..

ப்ரீபைட் பாவிக்கிற எல்லாருக்கும் தெரியும் இந்த விசயம்.

எவ்வளவெல்லாம் செய்ற மொபிடல், இங்கதான் ஏச்சு
வாங்குற..

ப்ளீஸ் இந்த வரையறையை நீக்கும்படி , முடியுமான
மொபிடல் நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள்,
ஊளியர்கள் , இந்த தகவலை எத்திவைக்குமாறு
கேட்டுக்கொள்ளும் அன்பிற்கும் பண்பிற்கும் உடைய
வாடிக்கையாளன்..

Retweet this

Sunday, August 16, 2009

போர்டிங் ஹவுஸ் 2ம் கட்டை


1st year அப்பிடி இப்பின்னு முடிஞ்சு..ஹொஸ்டல்
இந்த வருஷம் இல்ல..நாங்க 09 பேர் சேர்ந்து பதுள்ள
2ம் கட்டயிலான் வீட்டொண்ட எடுத்து இருக்கம்..

தனி வீடு..நாங்கதான் அங்க ராசா..very nice u know..
நிறைய படம் !!! கொஞ்சம்தான் படிப்பு..வந்து 07 நாள்தான்
but 06 படம் பாத்துட்டம்.. அதிலயும் ஷாருக்கான்ட
chukde chukde 03 தரம் பாத்துட்டம்.. 07ஆவது படம்
வெற்றிகரமா அடுத்த Roomல ஓடுது..

இதான் எங்குட வீடு.. முன் hall OPD எண்டும் , 03
wards இரிக்கி.. ICUம் இருக்கி.. ஏனெண்டா இஞ்ச இருக்கிற
கட்டில் எல்லாம் hospital கட்டில்..(nurses எடுக்கிற idea
இரிக்கி..)

OPDல cricketம் தூள் கிளம்பும்.. இதான் rules..
01. ஒரு குத்தில(one bounse) புடிச்சா out..

02. 03 ball தொடந்து படாட்டி out..

03. முன் சுவர்ல கிளம்பிப்பட்டா out..

தண்ணிதான் பிரச்சின..எப்பிடித்தான் இந்த சனங்கள்
காலத்த ஓட்டிச்சோ தெரியல்ல..

பாப்பமே புதிசா எலக்சன்(அதான் நம்முட ELECTION)
எல்லாம் நடந்திரிக்கி..தண்ணியாலும் வேணும்தானே..

Note this : ஆனா எங்குட கெம்பஸுக்கு தண்ணி
daily வருது.. கள்ள lineம் இருக்காம் எண்டு
கத வருது..

con't

Retweet this

Tuesday, August 11, 2009

இலங்கைப் பதிவர்களே...


பலரும் பல காலம் யோசித்து, பேசி, எழுதி, விவாதித்து வந்த விஷயம் நடைபெறக் காலம் கனிந்து வந்துள்ளது...

இலங்கைப் பதிவர் சந்திப்பு பற்றித் தான் சொல்கிறேன்...

பேசிக் கொண்டிருந்தால் போதாது.. கூடுவோம் என்று புல்லட் முதலில் இட்ட கிண்டல் பதிவு தான் பலரையும் தூண்டி விட்டது..

பலரோடும் பேசி நீண்ட காலம் இழுத்தடிக்காமல் காலம்,இடம் என்பவற்றைத் தெரிவு செய்து விட்டோம்..


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)
கொழும்பு 06.

நோக்கங்கள் :

இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்..

from loshan-loshan.blogspot.com

Retweet this