Saturday, June 12, 2010

இணையத்தில் பாதுகாப்பாக சஞ்ஞாரிப்பது எப்படி என்பதை யாஹூ சொல்கிறது


          
இணையதள பாவைனை தற்போது அனைத்து மட்டங்களிலும் அதிகரித்து வருகின்றது. மனிதர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்த இணைய உலகம் அபிவிருத்தி அடைந்துள்ளது. இது ஒரு பக்கம் சாதகமாக் இருந்தாலும் இங்கும் களவு , கற்பழிப்பு , ஏமாற்று வேலைகள் போன்றன இடம்பெறுகின்றது என்பது கவலைக்குரிய விடயமே. தற்போது அதிகமாக சமூக வலைத்தளங்கள் தொடர்பாக புதிய புதிய சர்ச்சைகள் தோன்றியுள்ளது. இப்படி அனைத்து வகையான பாதுகாப்பு பிரச்சினைக்கும் தீர்வு வழங்கும் பொருட்டு ஒரு இணையதளம் யாஹூ (yahoo) நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.


             இங்கு பலவகையான விடயங்கள் பலதரப்பட்ட கோணங்களிலும் அவதானிக்கப்பட்டு அதற்கான விபரங்களும் தரப்பட்டுள்ளது. எழுத்து வடிவிலும் வீடியோ வடிவிலும் பல விபரங்கள் தரப்பட்டுள்ளது.  குறிப்பாக பெற்றோர்கள் எவ்வாறு தனது பிள்ளைகளின் இணையப்பாவனையில் செல்வாக்குச் செலுத்த வேண்டும், எவ்வாறு அவர்களை வழிநடத்த வேண்டும் என்று சிறந்த முறையில் விபரிக்கப்பட்டுள்ளது.

               சமூக வலைத்தளம் ஒன்றில் எப்படி பாதுகாப்பாக சஞ்ஞாரிப்பது என்பது தொடர்பாக யாஹூ வெளியிட்டுள்ள கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளது.
  • Know your connections :- நீங்கள் தொடர்புவைத்திருக்கும் நபர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் மிகச் சிறந்தது. முகந்தெரிந்தவரை மாத்திரம் உங்கள் நண்பராக நண்பியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • Think before you post :- நீங்கள் ஏதாவது எழுதவோ பகிரவோ நினைத்தால் நின்று நிதானித்து யோசித்து செயற்படவும். நீங்கள் பகிர்ந்த தகவலை நீங்கள் மீண்டும் திருப்பி பெற முடியாதென்பதை கவனத்தில் கொள்ளவும். உதாரணமாக நண்பரிடம் பகிர்வதை ஆசிரியரிடம் சொல்ல முடியாது. நண்பரிடம் சொல்வதை முதலாழியிடம் சொல்ல முடியாது.  இப்படி இருக்கும் போது எல்லோரையும் குழுவாக வைத்துக் கொண்டு சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டாம்.
  • Protect your personal information :- உங்கள் தொடர்பான தனிப்பட்ட விடயங்களை உலகம் பார்க்கும் அளவுக்கு பிரசுரிக்க வேண்டாம். e-mail முகவரியாயினும் தவிர்ப்பது சிறந்தது.  
  • Configure your setting :- குறித்த இணையதளம் தொடர்பாக இருக்கும் அனைத்து settings களையும் தேடிக் கற்றுக்கொள்ளவும். 
         பெற்றோர்களுக்கும் பலவகையான அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளது. குறிப்பாக கண்ணனி வைக்கும் இடம், அவர்களின் இணையப்பாவனையை கண்காணிப்பது என்று பலவகையான விடயங்கள் தரப்பட்டுள்ளது.

              இது த்டர்பான மேலதிக தகவல்களை அறிய இந்த தளத்துக்கு செல்லவும்.
    yahoo safely


              

    Retweet this

    Wednesday, June 9, 2010

    மேம்படுத்தப்பட்ட gmail chat அறிமுகம்.


              
    எவ்வளவுதான் chating இணைய தளங்கள், chating மென்பொருள்கள் இருந்தாலும் gmail chat க்கு இணையாக வரமுடியாது. இலகுவான gmail chat இன்னும் இலகுவாகவும் மேம்பாட்டுடனும் வெளியாகி உள்ளது.

                email முகவரியை click செய்து தோன்றும் பெட்டியில் chating செய்வது வழக்கம். voice அல்லது video chat என்றால் முன்பெல்லாம் பெட்டியில் காணப்படும் லின்க்(link) இனை க்ளிக்(click) செய்து அரட்டை அடித்து வந்தோம். ஆனால் தற்போது வீடியோ மற்றும் வொய்ஸ் அரட்டைக்கு மெனு வடிவில் வடிவமைக்க்கப்பட்ட புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


               பெரிய மாற்றம் இல்லாவிடினும் அழகாகவும் இலகுவாகவும் உள்ளது 

    Retweet this