Monday, June 9, 2008

விளக்கம் வேண்டும்


பல்கலைக்கழக தெரிவு என்பது எமது மாணவர்களின்
இருக்கிறது என்டு சொன்னா...நானோ நீங்களோ
மறுக்க முடியாது....கிட்டத்தட்ட 2 1/2 வருடங்கள்
கடுமையாக படித்ததன் பயன்தான் இந்த பல்கலைக்
கழக தெரிவு....நமது நாட்டிலே அடிக்கடி பல்கலைக்
கழகங்களில் புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டு
வருகின்றது...கடைசியாக 2007 ஆண்டு 10 பாடநெறிகள்
அறிமுகப்படுத்தப்பட்டது....இதபத்திதான் ஒரு விசயத்த
சொல்லலாம் என்டு வந்திருக்கன்.......

இப்படி அறிமுகப்படுத்தர்ர பாடநெறிகள் சராசரியா
4 வருடங்கள் கொண்ட பாடநெறியாக இருக்கி.இப்படியான
புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்திற எங்குட பல்கலைக்
கழக மானியங்கள் ஆணைக்குழுவானது, இந்த பாடநெறிகள்
தொடர்பான விளக்கங்கள தராமல் விடுவது எவ்வளவு
பாரதூரமான விடயம் என்டு மாணவர்களுக்கிட்ட
கேட்டா சொல்லுவாங்க....

தொடர்ந்து 4 வருடம் படிக்கிற பாடத்த தெரிவு
செய்யும் போது அது தொடர்பான விளக்கங்கள் பற்றி
அறிய வேணும் என்கிறது பிழையில்லதானே...4 மாதம்
கொண்ட பாடத்த படிக்க சேரும்போதே எவ்வளவு விசயத்த
கேக்கம்.....ஆனா இது 4 வருடம்..............இப்பிடி சொல்லாம
விர்ரதால நாம என்ன படிக்கப்போறம் என்டு தெரியாமலேயே
மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள அனுப்ப
வேண்டியிருக்கு.....இதனால சில மாணவர்கள் இடையில
இந்த பாடநெறிய விட்டு விலகுற நிலமையும் ஏற்பட்டிருக்கி.

இந்த விளக்கங்கள எல்லாருக்கும் தெரியப்படுத்தாட்டியும்
பரவாயில்ல ஆனா தேவப்பர்ர ஆக்கள் பெற்றுக்கொள்ள
கூடியவகையில ஏதாவது செய்ய வேணும் தானே.......
உதாரணமா பேப்பர்லா போடுங்க என்டு சொல்லல்ல
அவர்களுடைய இணையதளத்திலயாலும் சேக்கலாம் தானே..
அந்த விண்ணப்பம் வாற புத்தகத்தில 2 வரியில சொல்றத்த
விளக்கம் என்டு சொன்னா நான் ஏற்க மாட்டன்...

இந்த விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் சரியான
நடவடிக்கைகள் எடுக்கனும் எங்கிறதுதான் என்னுடைய
விருப்பம்.........

சந்திப்பம்.........

Retweet this

Tuesday, June 3, 2008

என் இனிய தமிழ் மக்களே


குறிப்பு: கூவித்திரியுறன் என நினக்கொன்னாம்..
ஊக்கப்படுத்துவம் என்கிறதுதான் எனது
நிலைப்பாடு.....

இந்த நாட்களில் நான் இணையத்தில்
உலாவரும் போது தோன்றிய ஒன்றைப் பற்றி
நான் சொல்லலாம் என நினக்கன்..இன்னம்
சொன்னா வருத்தப்பர்ர விடயம்....

தனது எண்ணங்கள்,ஆக்கங்கள்,எதிர்பார்ப்புகள்
தேடல்கள்,ரசனைகள்,உணர்வுகள் இப்படி பல்வேறு
விடயங்களை எமது நண்பர்கள் பகிர்ந்து
கொள்றாங்க..அதனை படிப்பவர்கள் தங்களது
கருத்துக்களை விமர்சனங்களை பதிவு செஞ்சி
பதிவு செஞ்சுக்கும் வாறாங்க.....அங்கதான் எனக்கி
சின்ன ஒரு வருத்தம்....

நீங்க வேணுமெண்டாலும் பாக்கலாம்..அந்த
விமர்சனப்பகுதியில் வரும் விமர்சனங்கள்
இன்னொரு பதிவாளராலான் அதிகமா சேர்க்கப்
படுகுது....ஒரு தனிப்பட்டவரின் மின்னஞ்ஞல்
முகவரியிலிருந்து கருத்துக்கள் சேர்க்கப்பட்டதை
நான் கண்டதே இல்ல(நான் பார்த்தமட்டில்)......
இன்னம் ஒன்டு அப்பிடி கருத்துக்கள பகிர்ந்து
கொள்ளும் பதிவாளர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை
க்குள்ளான் இருக்காங்க..சுத்திச் சுத்தி 10....20.....
தளங்களுக்குள்ளான் இருக்காங்க.........

இணைய பாவனையாளர்களுக்கு நான் விநயமா
கேட்கிறது என்னென்டா,நீங்க தளங்களை பார்வையி
டும் போது அங்கு இருக்கிற பதிவுகள் கருத்துக்கள
வேண்டி நிற்கும் போது தயவு செய்து நீங்க ஏதாலும்
சொல்லுங்க...குறைஞ்ஞது "சரிதான்..இல்ல இது
பிழை அல்லது நல்லா இருக்கு" என்டாலும்
எழுதுங்கோ...நீங்க அப்பிடி எழுதும் போதுதான் அந்த
பதிவாளர் நல்லது நால சொல்லுவார்..சில
பதிவாளர்கள் கருத்துக்கள எதிர்பாக்காட்டியும் பல
பதிவாளர்கள் எதிர்பாக்காங்க.....

நமது கருத்து இன்னொருவரால அங்கீகரிக்கப்
படுவது தெரியவரும் போது எப்பிடியான சந்தோசம்
வரும் எண்டு நமக்கு நல்லா தெரியும்..சிரமம்
பாராது இந்த விடயங்களில் கவனம் செலுத்தவும்..

சந்திப்பம்......

Retweet this

Sunday, June 1, 2008

உங்களில் ஒருவனாய்


உலகத்தில பிறந்தம்..வாழ்ந்தம்..இறந்தம்...பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்திலஎத்தின மனிதர்கள் எத்தின சொந்தங்கள் எத்தினநண்பர்கள்...நமக்கிடயில பிரச்சினைகள் சண்டைகள்வராமலில்ல...அந்த பிரிவுக்கும் இணைவிற்கும்இடைப்பட்ட காலந்தான்,எங்களுக்குள்ள இருந்தஅன்பை,நட்பை அல்லது புரிதலை அளவிட்டுக்கொள்ள சரியான காலம்..பொய்த்தனமா இருந்திருந்தாஅது இந்த காலங்களில் வெளிக்காட்டப்பட்டுவிடும்..இது என்னுடைய நிலைப்பாடு..
விசயத்துக்கு வாறன்,உதாரணமா நான் எனதுகுடும்பத்தில ஒரு ஆளோட பிரச்சின என்டு வப்பமேஅந்த பிரச்சினையால எங்களுக்கிடையில தொடர்புகள்இல்லாம பெய்த்து..அத காரணமா கொண்டு எனதுவீட்டாரும் அந்த குறிப்பிட்ட நபரோட கதைக்ககூடா என எதிர்பாக்கிறது சரிதானா.......
இப்பிடி நாம எதிர்பாக்கமா இல்லையா.......இப்பிடிஒரு மனிதன் எதிர்பாக்கிறது எந்தளவுக்கு சரி எங்கிறத யோசிச்சு பாருங்க...இவ்வாறான பிரச்சினைவரும்.. போகும்.. அதெல்லாம் சகஜம் தானேஎங்கயலா? இன்னம் ஒன்டு சொல்றன் கேளுங்கோ....
இப்படி பிரச்சினைகள் வரும் போது இப்பிடியானதிணிப்புகள் எங்குட குழந்தைகள் மேலயும் விதிக்கப்பர்ரதுதான் கவலைக்குரிய விசயம்..எப்பிடியென்டா,எங்குட குழந்தைகள் நமது உறவினர்கள்ள வீட்டபோகுபோது நாம சொல்ற அறிவுரைகள்..உதாரணமா"மகன் Aunty ட வீட்ட போங்கோ, அங்க மாமா வருவார் அவர் என்ன கேட்டாலும் ஒன்டும் சொல்லபோடா.......என்ன தந்தாலும் வாங்கிரப்போடா" இப்பிடியான வார்த்தைகள சொல்லலாம்...........
இப்பிடியான விடயங்கள நாம செய்யவும் கூடாதுசெய்ய விடவும் கூடாது.....சொல்றது சரிதானே
குறிப்பு: எல்லாரும் இப்பிடி என்டு நான் சொல்லல்ல
சந்திப்பம்..............

Retweet this