Monday, May 31, 2010

பங்களாதேசில் முகப்புத்தகத்திற்கு(facebook) தடை


 
அண்மைக் காலமாக facebook இணைய தளத்தில் இஸ்லாமிய மததிற்கு எதிரான விடயங்கள் பரப்பட்டுவருகின்றதாகுவும் முஹம்மது நபியை(ஸல்லல்லாஹு அலைவஸல்லம்) கேலிப்படுத்தும் வகையில் பல படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பங்களாதேஸ் அரசாங்கம் facebook இணைய தளத்தின் பாவனையை தடை செய்துள்ளது.

  மேலும் பங்களாதேஸ் அரசியல் தலைவர்களை கேலிசெய்யும் வகையில் பல போட்டோக்கள்(photo) பிரசுரிக்கப்பட்டுள்ளதாகும் கூறப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக தடை என்றும் இந்த போட்டக்களை facebook நீக்குமிடத்து இந்த தடை அகற்றப்படலாம் என்றும் பங்களாதேஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 facebook இணையதளத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் அரசாங்கமும் facebook இணைய தளத்தை கடந்த ஒரு சில வாரத்திற்கு முன் தடை செய்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது..

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Sunday, May 30, 2010

மேம்படுத்தப்பட்ட yahoo தேடுபொறிகள்


yahoo நிறுவனத்தின் yahoo search இன்னும் ஒரு புதிய வசதியுடன் எமது விரல்களுக்கு.அதாவது தற்போது எந்த  image or video பிரபலமாக உள்ளது அல்லது எந்த image or video பலராலும் தேடப்பட்டு வருகின்றது என்பதை yahoo image search , yahoo video search அழகாகவும் தெளிவாகவும் எமக்கு காட்சிப்படுத்துகின்றது.


  இதன் மூலம் நமக்கு பரீட்சையமில்லாத பல விடையத்தினை காணக்கூடியதாகவும்,அன்றாட இணையப் பாவனையாளர்களின் போக்கினையும் அறிந்து கொள்வதோடு எங்களை update செய்து கொள்ளவும் இது உதவியாக இருக்கும்.


  நீங்கள் yahoo image or yahoo video search இனை பயன்படுத்தும் போது அங்கு தோன்றும்"see what's TRENDING NOW on the image search homepage" என்பதை க்ளிக் செய்து தற்போதைய trend ஐ நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .Retweet this

Saturday, May 29, 2010

ஓராண்டு பூர்த்தியை கொண்டாடிய google wave


    பிரமிக்க வைத்த கூகிள் வேவ்(google wave) ற்கு கடந்த 28ம் திகதி ஒரு வயதாகியது. கடந்த வருடம் May 28ம் திகதி எங்களில் சிலருக்கு அறிமுகமான google wave இப்போது அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பலருக்கு புரியாவிட்டாலும் சிலருக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ள இந்த google wave இனை நீங்களும் பயன்படுத்த விரும்பினால் இந்த தொடுப்பை http://wave.google.com க்ளிக் செய்து பரீட்சித்து பாருங்கள்.


We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Sunday, May 2, 2010

புதிய facebook Event 

        எமது நிகழ்வுகளை இலகுவாக ஏனையோருக்கு தெரியப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் நண்பர்களை அந்த நிகழ்வுகளுக்கு அழைக்கவும் facebook event பெரிதும் உதவியாக விளங்கிவருகின்றது. எமது முக்கிய நிகழ்வுகளை இப்பொழுது இலகுவாக உருவாக்கிக் கொள்ளும் வகையில் facebook தனது events இனை விருத்தி செய்துள்ளது.

     இப்பொழுது எமது facebook home page ல் புதிதாக event box ஒன்று தமது வலது பக்கத்தில் தோன்றும். அங்கு காணப்படும் "what are you planning" எனும் பகுதியில் தமது நிகழ்வுகளை type செய்வதன் மூலம் எங்கள் நிகழ்வுகளை இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம்.

     இதற்கு மேலதிகமாக public event, private event என்றும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. public event எனும் போது அனைவரும் காணக்கூடியதாகவும் private event எனும் பொழுது நாம் அழைத்தவர் மட்டும் காணக்கூடியதாகவும் காணப்படுகிறது.

     நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்திடுங்கள்

Retweet this

Saturday, May 1, 2010

youtube ல் தெரியும் மாற்றங்கள்


     youtube இணைய தளத்தில் இவ்வார காலப்பகுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய விடயங்ளிலிருந்து எமக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் சில விடயங்களை இந்தப் பதிவினூடாக காணக்கூடியதாக இருக்கும்.

01. Share with buzz and blogger


         youtube வீடியோக்களை இலகுவாக blogger , buzz ல் பகிர்ந்து கொள்ளும் வகையில் இரண்டு button கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த button களை click செய்து , youtube வீடியோக்களை இலகுவாக பகிர்ந்து கொள்ளலாம்.

02. video player மாற்றப்பட்டுள்ளது.

             youtube வீடியோக்களை தற்போது விளம்பரங்கள் இல்லாமல் கண்டுகளிக்ககூடியதாக இருக்கும்.இதனைவிட வடிமைப்பிலும் சில மாற்றங்களை காணக்கூடியதாக உள்ளது.

03. Email Alerts

         இப்பொழுது நீங்கள் subscribe பண்ணியுள்ள channel கள் இற்றைப் படுத்தப்படும் பொழுது, email மூலம் நீங்கள் அறிவுறுத்தப்படுவீர்கள். இதன் மூலம் அடிக்கடி நாம் youtube channel களை check பண்ணும் நேரத்தை சேமிக்கலாம்.

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

தமிழுக்கு வாக்களிப்போம்மக்கள் தனது சொந்த மொழியில் தேடு பொறியினை(search engine) பயன்படுத்த விரும்புகிறார்கள் என google நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றது.எனவேதான் google தான் அறிமுகப்படுத்திய ஒலியியல் திரை விசைப் பலகையினை தனது தேடு பொறியில் பயன்படுத்தக்கூடிய வகையில் நிறுவியுள்ளது. தமிழ் மொழி இன்னமும் இந்த சேவைக்கு உள்வாங்கப் படவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

  அதாவது நாம் ஆங்கிலத்தில் ”amma” என type செய்யும் போது ”அம்மா” என வரும் சேவை.


  உள்ளூர் மொழிகளில் google தேடுதல்களை மேற்கொள்ளும் போது, அங்கு காணப்படும் சிறிய keyboard icon ஐ click செய்து நமது சொந்த மொழிகளை type செய்து கொள்ளலாம். உதாரணமாக ஹிந்தி மொழியில் தேடுதலை மேற்கொள்ள இந்த linkஐ click செய்யவும்.
http://www.google.co.in/webhp?hl=hi

தமிழ் மொழிக்கு இந்த சேவை தற்போது வழங்கப்படாத போதிலும் நாம் நமது வாக்குளை பிரயோகித்து இதனை பெற்றுக்கொள்ளலாம். எனவெ இந்த நிமிடமே நமது வாக்குகளை தமிழுக்கு வழங்குவோம்.
 
http://spreadsheets.google.com/viewform?formkey=dHBoYWc3TFdCNm1mLTVVZzVfUWF2cWc6MQ 

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .
 

Retweet this