Tuesday, July 28, 2009

வீணாக்காதீர்


மீண்டும் எழுதலாம் என எண்ணம் வந்தபோது
இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும்
இந்த காலத்திற்கு என நம்புகிறேன்.

"இப்ப என்ன செய்றல் தம்பி?"

என்ற கேள்விக்கு எங்குட மாணவர்கள்
பெருமையா சொல்லும் பதில்
"நான் இந்த கெம்பஸ்ல படிக்கன்"

நிறைய பணத்தை எங்களுக்காக முதலிட்டு
அல்லது செலவு செய்து எமது அரசாங்கம் இந்த
பல்கலைக்கழக உயர்கல்வியை வழங்குகின்றது..
இதனை அப்படியே நாசமாக்கும் அளவுக்கு அல்லது
வீணாக்கும் வகையில் எமது சில மாணவர்கள்
நடப்பது கவலைதான்...க.பொ.த (உ.ப) பெறுபேற்றை
அடிப்படையாக வைத்து விண்ணப்பித்தவர்களில்
ஒரு குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் தெரிவு
செய்து இந்த உயர்கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இப்படி விண்ணப்பித்து தெரிவு செய்யப்படும்
மாணவர்களில் சிலர் மடத்தனமா நடந்து
கொள்வதுதான் கவலை..............

இப்படி தெரிவு செய்யப்பர்ர சிலர் இருக்காங்க,
அவங்களுக்கு வெளிநாடு செல்றத்துக்கு வீசா கிடைக்கும்
வரை
"சும்மா இருக்க இயலா எண்டு" கெம்பஸ் எப்பிடி
இருக்கும் எண்டு போய் பாத்திட்டு பாதியில விலகிப்போற
பண்டிதர்களும் எமது நாட்டில் உள்ளாங்கதான்.. results
இருக்குத்தானே எண்டு சும்மா ஒரு applicationஅ போட்டு
வாற வாய்ப்பை நாசமாக்கிறாங்க....நான் இப்பிடியான
பண்டிதர்கள என்னுடைய universityல சந்திச்சிருக்கன்..
அதனாலதான் சொல்றன்..

இன்னம் சிலர் இருக்காங்க "அந்த nursing diploma or
pharmacist diploma call பண்ணங்காட்டிலும் liteஅ fun ஒன்டு
எடுக்கலாம் எண்டு வாறாங்க..அவங்கட காசையும்
வீணாக்கி அரசாங்கத்துட காசையும் வீணாக்கி,இன்னொரு
மாணவனுக்கு கிடைக்க வேண்டிய அந்த உயர் கல்வி
வாய்ப்பையும் தட்டிப்பறிச்சு......

"கொஞ்சம் யோசிங்கோ"
தொடரும்....

Retweet this

Sunday, July 19, 2009

மீழ் வருகை


புதிய இடம் என்பதாலும் போதிய வசதியின்மையாலும்
கைவிடப்பட்ட எனது பதிவுகளை மீண்டும் எழுத
ஆரம்பிக்கிறேன்..........................

எனது பேச்சு நடை வாசிப்பது கஸ்டம் எண்டு
நினச்சா கொஞ்சம் எனக்கு சொல்லுங்க

Retweet this