Monday, May 26, 2008

அக்கரைப்பற்று கிளை


என்கட பிரதேசத்தில இருக்குற மூத்த வங்கியாளர்
இவர்தான்..இது அரச கூட்டுத்தாபனம்..நிறைய
வாடிக்கையாளரகள் இருக்காங்க..இன்னம் சொன்னா
வயதில மூத்த நிறைய ஆக்கள் அதாவது வயோதிபர்கள்
வந்து போற வங்கி..

சுருக்கமா சொல்றனே,அங்க counter என்டு சொல்ற
கரும பீடத்தில வேலைகள முடிக்கிறது கடும்
கஸ்டம்..எல்லாருக்கும் தெரிஞ்ஞ அந்த ஆமை
வேகத்திலான சேவையா நான் சொல்ல வரல்ல...
அந்த இடத்தில Q வரிசை முறை பின்பற்ற பர்ரதே
இல்ல...எல்லாரும் மேசையச் சுத்தி நிப்பாங்க,முன்னதா
நீட்டுற கைக்குத்தான் வேலை முடியும்..கொஞ்ஞம்
சாந்தமான ஆளா இருந்தா தலையில மிளகாய்
அரச்சிவிடுவாங்க..

நான் வாடிக்கையாளர குறை சொல்லமாட்டன்..
அதுக்காக அத சரி எங்கயும் இல்ல..அது மனித
இயல்புதான்."நான் தான் விரைவா போக வேணும்"
எங்கிறது..ஆனா அந்த வாடிக்கையாளர்கள ஒழுங்கு
படுத்தலாம் தானே..ஏனைய வங்கிகள மாதிரி
சேவையாளர்கள நிறுத்தியோ வரிசையா நிக்குறதுக்கான
ஏதாவது பெளதீக ரீதியான செய்யலாமே..

இன்னம் ஒன்டு...தெரிஞ்ஞ ஆக்கள் வந்து உள்ளால
கணக்குப் புத்தகத்தயோ வைப்புப் பணத்தயோ
நீட்டுறத்த நித்தாட்ட வேணும்..என்னால சொல்லாம
இருக்க முடியுதில்ல அது என்னென்டா கொஞ்சம்
வேகமா வேலய செய்யுங்கோ..

இப்படி சின்னச் சின்ன தவறுகளாலான் அரச துறை
நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில கெட்ட பெயர்.
நான் படிச்சிருக்கன் "சந்தயில நுகர்வோன்தான்
அரசன்" என்டு....
பிழையா ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

சந்திப்பம்...

Retweet this

Thursday, May 22, 2008

விளையாட்டுச் செய்திகள்அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொழ்றதுக்கு
நாங்க பல ஊடகங்களிலிருந்தும் செய்திகள
கேட்டும் பாத்தும் வாசித்தும் தெரிஞ்சு கொள்றம்.
காட்சி ஊடகம் அல்லது டிவி என்டா நமக்கு
முதல் நினைவு வாறது நமது தேசிய தொலைக்
காட்சிதான்....தமிழ் பேசுற மக்களான நாம அதிகமா
ரூ பாக்கிறல்ல என்கிறது உண்மதானே..அதே மாதிரி
நமக்கு அதிகமா பாக்க கிடைக்கும் அலைவரிசைதான்
நே...அதாவது நமது தேசிய தமிழ் தொலைக்காட்சி..
அதிகமான இடத்தில தெழிவா பார்க்க கூடுயதும்
அந்த தே.தொலைக்காட்சிதான்.....

செய்திகள பட்டியல் அல்லது வகைப்படுத்தும்
அதிகமான ஊடகங்கள் விழையாட்டுச் செய்திகளையும்
ஒரு முக்கியமான இடத்திலான் வெச்சி பார்த்து
வருகுது..அப்பிடி இருக்கும் நிலையில் நமது நே...
மட்டும் அதிகமான நாட்களில் விழையாட்டுச் செய்திய
புறக்கணிக்கிறது எந்த அளவுக்கு சரி எங்கிறது
எனக்கென்டா தெரியா....

எவ்வளவுதான் கள நிலவரங்கள கேட்டாலும்
அத கண்ணால பாக்கிற மாதிரி இல்லதானே..முழுசா
பாக்க முடியாட்டியும் 5...10 செக்கன் பாக்கிறது
அவ்வளவு அலாதியா இருக்கும்....

இப்படி எதிர்பார்ப்போட ஒரு கூட்டமும் இதயும்
ஒரு எதிர்பாக கொன்டு ஒரு கூட்டமும் காத்திருக்க
அந்த எதிர்பார்ப்ப உடக்கிற மாதிரி நடந்துகொள்றது
சரியில்ல..அதுவும் தேசிய தொலைக்காட்சி இப்படி
இருக்கிறது ஏற்கமுடியாத ஒன்டு..குறிப்பா சொன்னா
இந்த நாட்கள்ள நடக்கும் IPL செய்திகள சொல்லாதத
சொல்லலாம்...ஆனா ரூ அப்பிடி இல்ல என்டு
நினக்கன்....

என்கிட வீட்ட UHF அலைவரிசை இல்ல என்கிறதால
நான் TV பாக்கிற என்டா N Tv தான் பாப்பன்..அதனாலான்
நான் சொல்ல வேண்டி ஏற்பட்டது..

இந்த பதிவ பாக்கிற உங்கள்ள ஒருத்தருக்கு இந்த
செய்திய தெரிவிக்க முடிஞ்ஞா கட்டாயம் சொல்லுங்கா..
பிழையா ஏதும் சொல்லி இருந்தால் தயவுசெய்து
மன்னிங்கோ...எனெக்கி தனிப்பட்ட ரீதியா கோபம்
ஒருத்தர் மேலயும் இல்ல......................

சந்திப்பம்.....

Retweet this

Wednesday, May 21, 2008

ஏன் இந்த நடைமுறை


எல்லோருக்கும் தெரியும் பாடசாலை நாட்கள்ள
அதிகமா எங்களையும் என்குட ஆசிரியர்களையும்
பாக்க அல்லது பரிசோதிக்க கல்விக்காரியலயத்தில
இருந்து அதிகாரிகள் வருவாங்க..அத பத்தித்தான்
இந்த பதிவு.....

ஏன் இப்பிடி ஒரு நடைமுறை எண்டு எனகெண்டா
தெரியா..நாங்க செய்ற ஒப்படைகளா இருக்கட்டும்
SBA பேப்பரா இருக்கட்டும் எல்லாத்தையும் வாங்கி
ஒரு file ல போட்டு அலுமாரியில வச்சிடுவாங்க..
ஏன் தெரியுமா இந்த மேல் அதிகாரிகளுக்கு
காட்டுவதட்க்கு..உண்மையச் சொன்னா,அதிகமா
அத நாங்க வாசிச்சிருக்கவே மாட்டம்..
ஒரு கிழமெக்க அத செஞ்சி காட்டி மார்க்ஸ்
எடுக்குற அவசரத்துல....அதுலயும் group
Assignment எண்டா முழுசா பாக்கிரதே
கஷ்டம்..

நீங்க ஒரு மாணவனா இருந்த
நாட்கள வெச்சி யோசிச்சிபாருங்க..நான்
exception case a சொல்லல...ok.......எல்லாராலையும்
முடியாதுங்க ...

மதிப்புகுரிய கல்விப்பணிமனை அதிக்காரிகளே
நீங்க அப்பிடி காட்டாயமா பாக்க வேணும்
எண்டு கேக்கயலா...ஏன் என்குட ஆசிரியர்களுடைய
பதிவுகள நம்பமாட்டயலா...நம்பிக்கை இல்லண்ட
நீங்க அறிவிக்காமலுக்கு வந்து டெஸ்ட் பண்ணுங்க
அப்பதான் நீங்க ஒன்குட கடமைய சரியா
செய்ரயல் எண்டு எடுக்கலாம்..இன்னம் ஒண்டு.. ஏன்
ஒங்கள கண்டு ஆசிரியர்கள் அப்பிடி பயப்புர்றாங்க .
சில நேரம் லீவ் ம் எடுக்காங்க.....

மதிப்புக்குரிய ஆசான்களே,ஏன்
இந்த பயம்?நீங்க ஏன் அவங்களுக்கு
காட்ட வேண்டிய பதிவுகள அல்லது
அறிக்கைகள அவங்க வாறதுக்கு முந்தின
நாள் தானா செய்யணும் ...

இப்பிடியான செயல்கள் என்னை A/L படிக்கும்போது
கடுமையா பாதிச்சது...பிழையா ஏதும்
கேட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் ...

சந்திப்பம் ........

Retweet this

Saturday, May 17, 2008

CAFE


அடிக்கடி நான் அந்த நிறுவனத்துக்கு போவன்.
அது இணையச் சேவையையும் வழங்குற
நிறுவனம். casp எண்டு சொல்வாங்க..மிச்சம்
உதவியா இருக்கி..குறிப்பா எனக்கி...

என்ன விசயமெண்டா அங்க நான்
போய்வரும் போதேல்லாம்,"என்ன cafe ல
இருந்தா "..என்டுஎன்ன சந்திக்கிற நண்பர்கள்
கேட்பாங்க..

ஏன் எந்த கேள்வி என்டு பாத்தா,பிழையா
விழங்கி வச்சிருக்காங்க..இணையத்தில இருக்கிற
ஒரு பக்கத்த மட்டுந்தான் அவர்களுக்கு தெரியும்
என்டு நினக்கன்..என்ன சொல்றன் என்டு விழங்கியிருக்கும்..
நான் முடிவோடான் போற பிழையான பக்கங்கள
திறக்குறல்ல எண்டு..
நல்லது கூடுதலா இருக்கண்டு ஏன்
விழங்குதில்ல?நான் இத ஏன் சொல்ரன் ஏன்டா?
இப்பிடி ஒரு கருத்து நிலவும் எண்டா நாமஉலக்கத்தொட
பயணிக்கிற கஷ்டம்..நாலு நல்ல விசயத்த தேர்ரவனுக்கு
கஷ்டமா இருக்கும்...விளங்க அல்லது விளங்க வைக்க try பண்ணுவம்.... சந்திப்பம்

Retweet this

Thursday, May 15, 2008

நாளேடுகளில் இன்றுநமது தேசிய தமிழ் தொலைக்காட்சியில் ஓழிபரப்பகும் பிரயோசனமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நாளேடுகளில்இன்று..பாராட்டுக்கள் தெரியாமலுக்குத்தான் கேட்கன் என்னத்துக்கு அந்த பெண் தொகுப்பாளர்கள்.அந்த பேப்பர எடுத்து கொடுக்கவா.ஏன் அவங்க எடுக்க மாட்டங்க்ள இல்ல பெண்கள்தான் வாசிக்க மாட்டாங்களா..இல்ல வாசிக்க தெரிந்த பெண் தொகுப்பளர்கள்தான் இல்லையா? இல்ல எண்டு சொன்ன நான் ஏட்க மாட்டன்.ஏன் ஏன்டா நல்ல அறிவிப்பாளர்கள் இருக்கங்களே..அப்படி இல்ல,அவங்கதான் வாசிப்பாங்க என்டா தனியாளாவேவாசிக்கட்டும்....அப்பிடி அழகு சேர்க்க வேண்டிய அவசியம் அந்த நிகழ்ச்சிக்கு இல்ல.... பிழை எண்டா மன்னிக்கவும் சந்திப்பம்......

Retweet this

Monday, May 12, 2008

கொழும்பு நகர சுத்தி வந்து பாருங்க


இப்பதான் கொஞ்ஞ நாளக்கி முன்ன நான் கொழும்புக்கு
போயிருந்தன்....கொழும்பு எனக்கி பெரிசா பழக்கம் இல்ல.....
அதென்ன நாகரீகத்துட உச்சக்கட்டமா இல்ல பழகின
விதமா இல்ல உலகம் சீர் கெட்டு பெய்த்தா...நான் இப்பதான்
இத பாத்திருக்கலாம்..இடு கன நாளா நடந்து வரலாம்..ஆனா
நெடுநாளா ஒரு பிழையான விசயம் நடந்து வந்தா அது சரி
என்டில்லானே..
பொது இடம் என்கிற அடக்கமே இல்ல.......அது மனச
சஞ்சலபடுத்து.Bus என்டும் இல்ல Zoo என்டும் இல்ல..Beach
என்டும் இல்ல..வேற இடங்கள குறிப்பிட்டு சொல்ல தெரியா..
கஷ்டமா இருக்கி.....ஒரு சராசரி இளைஞ்ஞனா,வேற வேற
எண்ணங்கள் வருகுது..விளக்கமா சொல்ல தேவல்லதானே...
இதெல்லாம் ஏன் சொல்றன் என்டா,இந்த செயல்கள
பாத்து நம்புட சகோதரங்கள் கெட்டு பெய்திருவாங்க...தமிழ்
பேசுற மக்களான எங்களுக்கு இது புதிசி தானே......குறிப்பா
சொன்னா வட கிழக்கு மக்களுக்கு......என்னயும் சேத்துதான்
சொல்றன்.....
கொழும்பு நகரத்த நோக்கி எங்கள் மாணவர்கள் அதிகமா
இப்ப போறாங்க..உயர் தரமா இருக்கட்டும் பல்கலைக்கழகமா
இருக்கட்டும் பல விதமான பாடநெறிகளும் கூட..இவர்கள்
இத பாத்து நாமளும் இப்பிடி இருக்கலாம் என்டு நினச்சா
நிலமை கவலைக்கிடம் என்கிறத்துல எனக்கி சந்தேகம் இல்ல.
இப்ப இருக்கிற ஆக்கள திருத்த இயலா என்டாலும்
புதுசா போறாக்கள் இதுல விளாமலுக்கு இருக்க, ஆற்றல்
இருக்கிற மக்கள் அல்லது அனுபவசாலிகள் அல்லது உரிய
பெற்றோர்கள் ஏதாலும் செய்ய வேண்டும்....
சந்திப்பம்...........

Retweet this

We care always


எமது நாட்டில் காணப்படும் பிரபல்யமான செல்பேசிச்
சேவை இது..smart என்று சொன்னால் எல்லாருக்கும்
தெரியும்.இது நான் அனுபவித்த அல்லது உணர்ந்த
விடயம்....சொல்லப் போனா Smart பாவிக்கிற ஆக்கள்
அனுபவிக்கிறதுதான்...
என்னென்டா விசயம்,நாம செல்பேசிய பாவிக்கம்
தானே அதுல எவ்வளவோ புதிய வசதிகள் சேவை
வழங்குனர்களால் அறிமுகப்படுத்தபடுகிறது..
அதையும் விட சில சந்தேகங்கள
தீர்க்க வேண்டியிருக்குது..இதுக்காக நாம வாடிக்கையாளர்
சேவை நிலயத்திற்கு அழைக்க வேண்டியிருக்கு..
இப்படியெல்லாம் இருக்க இந்த M வா.சேவைக்கு எடுத்தா
அவங்க அத ஏற்றெடுப்பாங்களா எங்குற சந்தேகம்
ஒவ்வொரு முறயும் வருகுது..(எனது பிரதேசத்தை
அடிப்படையாக கொண்டு) ஏனென்டா அப்பிடி சுணக்கம்..
2, 3 நிமிடம் என்டா பரவாயில்ல..7, 8 நிமிடம் ஏன் 10
நிமிடத்துக்கு மேலயும் போகுது....


இதெல்லாத்தயும் விட நாம அப்பிடி காத்திருந்து
அவங்களுக்குட்ட கதைக்கம் என்டு வைங்கொளன்,
அங்க பல சேவையாளர்களுக்கு உரையாடவே தெரியா
என்டு சொல்லலாம்.ஏதோ அடிக்கிற ஆக்கள்
மாதிரி கதக்காங்க..பயமா இருக்கி..கொஞ்ஞம் கனிவா
இருந்தாத்தான் என்ன...அவர்களுடய பிரதான
போட்டியாளர மாதிரி...இன்னம் சொன்னா
அப்பிடி ஒரு அவசரம் அவங்களுக்கு..தடார் என்டு cut
பண்ணிருவாங்க.

வேகமா வழர்ந்து வாற நிறுவனத்துக்கு இது நல்லம்
இல்ல என்டு நினக்கன்..பிழை எண்டா மன்னிக்கவும்....

சந்திப்பம்.........

Retweet this

Wednesday, May 7, 2008

பார்வையாளர்கள்....


அடிக்கடி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய
கட்டாயம்,எனக்கு இந்த காலங்களில் ஏற்பட்டன..அது
எங்கட ஊர்ல இருக்கிற ஆதார வைத்தியசாலை..பெரும்
உதவியா இருக்கி எங்கட மக்களுக்கு.....

என்ன விசயம் என்டா,ward பாக்க குறிப்பிட்ட நேரத்திலான்
போக வேண்டியிருக்கி..வழமதான்...ஒழுங்கீனங்கள தடுக்க இப்படி
ஒரு ஒழுங்கு...இது எல்லாருக்கும் சமனாத்தானே இருக்கணும்..
ஆனா அங்க அவ்வாறில்ல..அங்க வேல செய்ற ஆக்கள தெரிஞ்சிருந்தா
நாம எந்த நேரமும் போகலாம்..இது எந்த வகையில நியாயம்...

உண்மைய சொன்னா எனக்கு அங்க ஒருவரயும் தெரியா..
நாம காத்துக்கு நிக்கிறான் ஆனா பாருங்க அப்பதான் வந்த ஒருவர்
உள்ளுக்கு போய்விடுவார்..நாம எங்க போற தெரிஞ்ஞ ஆக்களுக்கு..

இது சரியா? பிழையா என்கிறது ஒரு பக்கம் இருக்க.என்ன
மாதிரி ஒருவர்ர சிபாரிசும் இல்லாதவர்களிடம் கனிவா நடக்காட்டியும்
கடிந்து கொள்ளணாம்....எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கிதானே..
முதல்லயே கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கொணாம்....
எவ்வளவோ மனக்கஸ்டத்தோட வருவாங்க இல்லயா......

சந்திப்பம்.......

Retweet this

பேப்பர் பொடியன்..அண்ண என்டு பேப்பர் பொடியன் கொஞ்ச நாளக்கி முந்தி வந்த
நேரம் எவ்வளவு சந்தோசபபடுவன் தெரியுமா? ஆனா இப்ப ஒரு மாதரியா இருக்கி..
எப்பிடி சொல்ற,உடம்பெல்லாம் கூசுது என்டு சொல்வாங்களே அப்பிடி இருக்கி....
சூரியன் தொடந்து கேட்ட ஆக்களுக்கு விளங்கும் எங்கிறது என்ட ஊகம்.
ஏன்னா அந்த பொடியனுக்கும் இந்த பொடியனுக்கும் நிறயவே வித்தியாசம்.....

செந்தூரன் அண்ணா மாதிரி வரவேயில்லயே..அந்த குரல் மட்டும்
எங்களுக்கு பிடிச்சிருக்கு என்டில்ல...அவர்ர அந்த ஆளமான,நய்யான்டித்தனமான
விமர்சனம்..டக்...டக் என்டு சொல்ற ஒவ்வொரு விளக்கம்,அந்த வாசிப்பு.. அந்த
ம்ம்ம்ம்ம்ம்ம் இதெல்லந்தான்....குறிப்பா எனக்கி புடிக்கிற......

நவா அண்ணா,அந்த பழைய பாணி வேண்டாமே....ஒரு புது விதமா
முயற்சிக்கலமே..."எல கிரி மாஸ்டர்" மாதிரி... கட்டாம் பட்டி கந்தசாமி மாதிரி...

நீங்க சொல்ற மாதிரி தனித்தன்மை ஒவ்வருவருக்கும் இருக்குத்தானே
சந்திப்பம்....

Retweet this

தென்கிழக்கு வளாகம்என்னடா தலைப்பு இது என்டு யோசிக்கயலா?
யோசிக்கிற அளவுக்கு ஒன்டும் இல்ல என்டு சொல்ல
மாட்டன்..நாம எல்லாரும்(குறிப்பா அம்பாரை மாவட்ட
மாணவர்கள்) ஒலுவில் வளாகம் என்டு சொல்ற தென்கிழக்கு
பல்கலைக்கழகம் தொடர்பாத்தான்.....

நான் சொல்லப்போறது யுனிவசிட்டிய பத்தியில்ல..
அங்க படிக்கிற,படிச்ச,படிக்க போற மாணவர்கள் தொடர்பாத்தான்.
இன்னம் சொல்லப்போனா அங்க படிக்க தகுதியில்லாத அல்லது
றிசல்ஸ்(பெறுபேறு)காணாத கனவான்கள் மற்றும் யுனிவசிட்டிய
கடந்து போற எங்கட சகோதரங்கள் தொடர்பாத்தான்....

ஒரு பிள்ளயே தனது தாயப்பத்தி பிளையா கதச்சா நல்லாவா
இருக்கும்...அப்பிடி கதக்குறது சரிதானா..அப்பிடி பிளையா இருந்தாலும்
அத சரிசெய்றதுதான் ஒரு நல்ல பிள்ளக்கி அழகு..இல்லயா...அங்கதான்
படிச்சி பட்டமும் பெற்றிருப்பாங்க ஆனா பாருங்க,நாம போய் "நான்
யுனிவசிட்டிக்கு எடுபட்டிருக்கன்.எப்பிடி இந்த அப்ளிகேசன் நிரப்புற
என்டு கேட்டா...எங்கயாலும் போங்க ஒலுவில் வேணாம் எங்கிற ஆக்கள்தான்
இருக்காங்க...பொய்யில்லங்க எனக்கி நடந்ததுதான்...அப்பிடி என்ன குறை..
அப்பிடி மோசமா???கொஞ்ஞம் சொல்லுங்க

இப்ப படிக்கிறவிய ஒரு படி மேல போய் கலவன் பாடசாலை
என்கிறதும் ஓதப்பள்ளிக்கூடம் என்கிறதும் களியோட ஸ்கூல் என்கிறதும்
கேக்கிறதுக்கு கஷ்டமா இருக்கி...உண்மைய சொல்லப்போன அவங்க
போய் 09 மாதம்தான் இருக்கும்..ஒரு சீனியர் சொன்னா "வந்து பாருங்க,
ஏன் வந்தம் என்டு இருக்கும் என்டு"....

அதெல்லாம் விடுங்க ஒரு சில ஆசிரியர்கள் அத விட ஒரு
படி மேல போய் J எங்கிற எழுத்தே form ல இருக்கப்போடா எங்காங்க...

இந்த விஷயங்கள் உண்மதானா??இல்ல,கிட்ட இருக்கிறதால
பெறுமதி விளங்கல்லயா....

மாணவர்கள் இப்படி சொல்ல காரணம் என்ன?? பல்கலைக்கழக
நிர்வாகம் என்ன பதில் சொல்றயல்....

Retweet this

Saturday, May 3, 2008


Hi all.specially senior blog publishers.
i cant use English fluently and also i dont know
how to type in Tamil..there is no any facilities
in this window...please help me.I want to share
my thoughts through this blog.

Retweet this