Thursday, May 22, 2008

விளையாட்டுச் செய்திகள்



அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொழ்றதுக்கு
நாங்க பல ஊடகங்களிலிருந்தும் செய்திகள
கேட்டும் பாத்தும் வாசித்தும் தெரிஞ்சு கொள்றம்.
காட்சி ஊடகம் அல்லது டிவி என்டா நமக்கு
முதல் நினைவு வாறது நமது தேசிய தொலைக்
காட்சிதான்....தமிழ் பேசுற மக்களான நாம அதிகமா
ரூ பாக்கிறல்ல என்கிறது உண்மதானே..அதே மாதிரி
நமக்கு அதிகமா பாக்க கிடைக்கும் அலைவரிசைதான்
நே...அதாவது நமது தேசிய தமிழ் தொலைக்காட்சி..
அதிகமான இடத்தில தெழிவா பார்க்க கூடுயதும்
அந்த தே.தொலைக்காட்சிதான்.....

செய்திகள பட்டியல் அல்லது வகைப்படுத்தும்
அதிகமான ஊடகங்கள் விழையாட்டுச் செய்திகளையும்
ஒரு முக்கியமான இடத்திலான் வெச்சி பார்த்து
வருகுது..அப்பிடி இருக்கும் நிலையில் நமது நே...
மட்டும் அதிகமான நாட்களில் விழையாட்டுச் செய்திய
புறக்கணிக்கிறது எந்த அளவுக்கு சரி எங்கிறது
எனக்கென்டா தெரியா....

எவ்வளவுதான் கள நிலவரங்கள கேட்டாலும்
அத கண்ணால பாக்கிற மாதிரி இல்லதானே..முழுசா
பாக்க முடியாட்டியும் 5...10 செக்கன் பாக்கிறது
அவ்வளவு அலாதியா இருக்கும்....

இப்படி எதிர்பார்ப்போட ஒரு கூட்டமும் இதயும்
ஒரு எதிர்பாக கொன்டு ஒரு கூட்டமும் காத்திருக்க
அந்த எதிர்பார்ப்ப உடக்கிற மாதிரி நடந்துகொள்றது
சரியில்ல..அதுவும் தேசிய தொலைக்காட்சி இப்படி
இருக்கிறது ஏற்கமுடியாத ஒன்டு..குறிப்பா சொன்னா
இந்த நாட்கள்ள நடக்கும் IPL செய்திகள சொல்லாதத
சொல்லலாம்...ஆனா ரூ அப்பிடி இல்ல என்டு
நினக்கன்....

என்கிட வீட்ட UHF அலைவரிசை இல்ல என்கிறதால
நான் TV பாக்கிற என்டா N Tv தான் பாப்பன்..அதனாலான்
நான் சொல்ல வேண்டி ஏற்பட்டது..

இந்த பதிவ பாக்கிற உங்கள்ள ஒருத்தருக்கு இந்த
செய்திய தெரிவிக்க முடிஞ்ஞா கட்டாயம் சொல்லுங்கா..
பிழையா ஏதும் சொல்லி இருந்தால் தயவுசெய்து
மன்னிங்கோ...எனெக்கி தனிப்பட்ட ரீதியா கோபம்
ஒருத்தர் மேலயும் இல்ல......................

சந்திப்பம்.....

0 comments: