Monday, May 26, 2008

அக்கரைப்பற்று கிளை


என்கட பிரதேசத்தில இருக்குற மூத்த வங்கியாளர்
இவர்தான்..இது அரச கூட்டுத்தாபனம்..நிறைய
வாடிக்கையாளரகள் இருக்காங்க..இன்னம் சொன்னா
வயதில மூத்த நிறைய ஆக்கள் அதாவது வயோதிபர்கள்
வந்து போற வங்கி..

சுருக்கமா சொல்றனே,அங்க counter என்டு சொல்ற
கரும பீடத்தில வேலைகள முடிக்கிறது கடும்
கஸ்டம்..எல்லாருக்கும் தெரிஞ்ஞ அந்த ஆமை
வேகத்திலான சேவையா நான் சொல்ல வரல்ல...
அந்த இடத்தில Q வரிசை முறை பின்பற்ற பர்ரதே
இல்ல...எல்லாரும் மேசையச் சுத்தி நிப்பாங்க,முன்னதா
நீட்டுற கைக்குத்தான் வேலை முடியும்..கொஞ்ஞம்
சாந்தமான ஆளா இருந்தா தலையில மிளகாய்
அரச்சிவிடுவாங்க..

நான் வாடிக்கையாளர குறை சொல்லமாட்டன்..
அதுக்காக அத சரி எங்கயும் இல்ல..அது மனித
இயல்புதான்."நான் தான் விரைவா போக வேணும்"
எங்கிறது..ஆனா அந்த வாடிக்கையாளர்கள ஒழுங்கு
படுத்தலாம் தானே..ஏனைய வங்கிகள மாதிரி
சேவையாளர்கள நிறுத்தியோ வரிசையா நிக்குறதுக்கான
ஏதாவது பெளதீக ரீதியான செய்யலாமே..

இன்னம் ஒன்டு...தெரிஞ்ஞ ஆக்கள் வந்து உள்ளால
கணக்குப் புத்தகத்தயோ வைப்புப் பணத்தயோ
நீட்டுறத்த நித்தாட்ட வேணும்..என்னால சொல்லாம
இருக்க முடியுதில்ல அது என்னென்டா கொஞ்சம்
வேகமா வேலய செய்யுங்கோ..

இப்படி சின்னச் சின்ன தவறுகளாலான் அரச துறை
நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில கெட்ட பெயர்.
நான் படிச்சிருக்கன் "சந்தயில நுகர்வோன்தான்
அரசன்" என்டு....
பிழையா ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

சந்திப்பம்...

6 comments:

M.Rishan Shareef May 26, 2008 at 10:26 AM  

பிழையாக எதுவுமே சொல்லவில்லை.சரியாகத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.
இது நிறைய இடங்களில் நடக்கூ சங்கதிதான்.ஆனாலும் பூனைக்கு யாராவது மணி கட்டவேண்டுமே.

இந்தப் பதிவை வங்கியினருக்கு வாசிக்கச் செய்யவேண்டும்.இல்லாவிடில் யாராவது நேரில் சந்தித்து எடுத்துச் சொல்லவேண்டும்.

சீக்கிரம் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்ப்போம். :)

இறக்குவானை நிர்ஷன் May 27, 2008 at 4:32 PM  

அன்பு நண்பர் ரிஷான் கூறியது போல சீக்கிரம் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் இளையோரின் ஒத்துழைப்பு அவசியம்.

farzan abdul razeek May 29, 2008 at 10:56 AM  

சின்னச் சின்ன பதிவுகளில் நிறையவே கதைக்கள் அஸ்பர். இந்த வகையான பார்வைகள்தான் மாற்றங்களிற்கான முதற் படிகள். உங்களால் சீர்குலைவுகளை அங்கீகரிக்க பார்த்துவிட்டு இருக்க முடியவில்லைதானே...

அது அழகாய் இருக்கிறது அஸ்பர். இன்னும் கொஞ்சம் வெட்டயாள வந்து பாருங்கோ.. அசிங்கமாய்த்தான் கிடக்கு மணி..

www.farzanpirathihal.blogspot.com
www.yenathulaka.blogspot.com

Unknown January 1, 2009 at 10:11 AM  

pilaikkal athuvum illa silatha thavira silathukal not clear

Farhan May 5, 2009 at 12:02 PM  

செக்கியுரிட்டி இத கொஞ்சம் பாக்கலாம் தானே !!!

சரி அஸ்பர் இத மெனேஞர்கிட்ட செல்லி பாப்பம் என

Farhan May 5, 2009 at 12:04 PM  

அது மட்டுமில்ல நாம் படிக்ககொள்ள சேர் லைன்ல நிக்க செல்றது இதுக்குதான்