Showing posts with label google. Show all posts
Showing posts with label google. Show all posts

Wednesday, June 9, 2010

மேம்படுத்தப்பட்ட gmail chat அறிமுகம்.


          
எவ்வளவுதான் chating இணைய தளங்கள், chating மென்பொருள்கள் இருந்தாலும் gmail chat க்கு இணையாக வரமுடியாது. இலகுவான gmail chat இன்னும் இலகுவாகவும் மேம்பாட்டுடனும் வெளியாகி உள்ளது.

            email முகவரியை click செய்து தோன்றும் பெட்டியில் chating செய்வது வழக்கம். voice அல்லது video chat என்றால் முன்பெல்லாம் பெட்டியில் காணப்படும் லின்க்(link) இனை க்ளிக்(click) செய்து அரட்டை அடித்து வந்தோம். ஆனால் தற்போது வீடியோ மற்றும் வொய்ஸ் அரட்டைக்கு மெனு வடிவில் வடிவமைக்க்கப்பட்ட புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


           பெரிய மாற்றம் இல்லாவிடினும் அழகாகவும் இலகுவாகவும் உள்ளது 

Retweet this

Tuesday, June 8, 2010

கூகிளிடமிருந்து புதிய இரண்டு சேவைகள்


            கூகிள் மெப்ஸ்(google maps),  கூகிள் பஸ்(google buzz),  ஜிமைல்(gmail) என்பவற்றின் கலவையாகவே இந்த புதிய சேவை அமைந்துள்ளது. நமது நண்பர்களின் ஊரையோ அல்லது அவர்களின் வீட்டுக்கு செல்லும் பாதையையோ அல்லது அவர்களின் வீட்டையோ தேடி அலைய வேண்டிய சிரமத்தை கூகிள் மெப்ஸ்(maps) நமக்கு போக்கியது. தற்போது குறித்த ஒரு அமைவிடத்தை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையை கூகிள் இலகுவாக்கித்தந்துள்ளது.



           முன்பெல்லாம் ஒரு இடத்தை கூகிள் மெப்ஸ்(maps) மூலம் நமது நண்பர்களுக்கு காட்ட வேண்டுமானால், அந்த மெப் ன் லின்க்கினை(link) எடுத்து மைல்(mail) பண்ணுவோம்.அந்த லின்கினை கிளிக்(click) செய்து அந்த இடத்தை பார்க்கக் கூடியதாக இருந்தது ஆனால் தற்போது எமது inbox ல் வைத்தே பார்க்க கூடியதாக இருக்கும். இதனை செயற்படுத்த gmail setting ற்கு சென்று Labs என்பதை க்ளிக் செய்து  Google Maps previews in mail என்பதை enable செய்து save பண்ணிக்கொள்ளவும்.


       அடுத்தது google buzz ல் மெப்ஸ் இனை சேர்த்துக்கொள்ளல். நீங்கள் பகிரப்போகும் மெப்ஸ் ன் லின்கினை எடுத்து paste செய்து கொண்டால் போதும். google maps இனி google buzz இலும் தெரியும்.

we love your feedback 
 

Retweet this

Saturday, June 5, 2010

விற்பனைக்குவந்துள்ள கூகிள் T-சேர்ட்


  
  பிரபல்யங்களின் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களை பாவிப்பதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் கூகிள் நிறுவனம் அவர்களின் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களை சந்தைக்கு விடுவது வழக்கம். புதிதாக அவர்கள் சந்தைக்கு விட்டிருப்பது GMAIL சின்னம் பொறிக்கப்பட்ட T-Shirt. பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. விலைதான் சற்று அதிகம். அண்ணளவாக 42 அமெரிக்க டொலர்.

       வசதி இருந்தால் நீங்களும் வாங்கி அணிந்து கொள்ளுங்கள். தற்போது google store ல் அந்த T-சேர்ட்டினை வாங்கிக் கொள்ளலாம். மேலும் சில google உற்பத்திகளின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

google cap

Youtube pen

Google Bag



Google wave t-shirt



Youtube t-shirt





Retweet this

Thursday, June 3, 2010

உங்கள் விருப்பத்திற்கேற்ப மாறும் கூகிள்(google)


 
எல்லோருக்கும் பிடித்தமான கூகிளின் home page இனை நமது விருப்பத்திற்கு ஏற்ப அழகுபடுத்திக்கொள்ளலாம். அதாவது எமக்கு விருப்பமான படத்தினை background ஆகா நிறுவிக்கொள்ளலாம். இங்கு நமது கணணியில் இருக்கும் படத்தினையோ அல்லது உங்களது பிகாசா அல்பத்திலிருக்கும் படத்தினையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இதனை உங்கள் கூகிளிலும் செயற்படுத்த விரும்பினால் google.com சென்று, அங்கு இடது பக்க கீழ் மூலையில் காணப்படும் link இனை க்ளிக் செய்து , உங்களுக்கு விருப்பமான படத்தினை நிறுவிக் கொள்ளலாம்.

    உங்களது home page ல் அவ்வாறான link காணப்படின் சற்று காத்திருக்கச் சொல்லியிருக்கிறது கூகிள் நிறுவனம். மிக விரைவில் நம் எல்லோரையும் இந்த சேவை வந்தடையும் என்பதில் எந்த சந்தேகமமுமில்லை.

Retweet this

Saturday, May 1, 2010

தமிழுக்கு வாக்களிப்போம்



மக்கள் தனது சொந்த மொழியில் தேடு பொறியினை(search engine) பயன்படுத்த விரும்புகிறார்கள் என google நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றது.எனவேதான் google தான் அறிமுகப்படுத்திய ஒலியியல் திரை விசைப் பலகையினை தனது தேடு பொறியில் பயன்படுத்தக்கூடிய வகையில் நிறுவியுள்ளது. தமிழ் மொழி இன்னமும் இந்த சேவைக்கு உள்வாங்கப் படவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

  அதாவது நாம் ஆங்கிலத்தில் ”amma” என type செய்யும் போது ”அம்மா” என வரும் சேவை.


  உள்ளூர் மொழிகளில் google தேடுதல்களை மேற்கொள்ளும் போது, அங்கு காணப்படும் சிறிய keyboard icon ஐ click செய்து நமது சொந்த மொழிகளை type செய்து கொள்ளலாம். உதாரணமாக ஹிந்தி மொழியில் தேடுதலை மேற்கொள்ள இந்த linkஐ click செய்யவும்.
http://www.google.co.in/webhp?hl=hi

தமிழ் மொழிக்கு இந்த சேவை தற்போது வழங்கப்படாத போதிலும் நாம் நமது வாக்குளை பிரயோகித்து இதனை பெற்றுக்கொள்ளலாம். எனவெ இந்த நிமிடமே நமது வாக்குகளை தமிழுக்கு வழங்குவோம்.
 
http://spreadsheets.google.com/viewform?formkey=dHBoYWc3TFdCNm1mLTVVZzVfUWF2cWc6MQ 

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .
 

Retweet this

Friday, April 30, 2010

அண்மைக் காலத்தில் google வெளியிட்டுள்ள வீடியோக்கள்


1. Google chrome தொடர்பானது



2. Google earth தொடர்பானது





3. youtube நடத்தவிருக்கும் போட்டி தொடர்பானது.



4.Google Analytic தொடர்பானது



5. செல்பேசியிலான google image search தொடர்பானது.



6. google place தொடர்பானது



We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this

Wednesday, April 28, 2010

Google தரும் “similar”



   தேடுபொறிகளில் முதல் நிலைவகிக்கும் google, தனது பாவனையாளர்களுக்கு இன்னுமொரு வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது.google search results பக்கத்தில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் “similar” என்பதை பயன்படுத்தி, ஒரு இணைய தளத்திற்கு ஒத்த அல்லது சமனான தளங்களை பட்டியலிட்டு காட்டுகின்றது.

   இந்தச் சேவையை பயன்படுத்தி எமக்கு பிடித்தமான ஒரு விடயத்துடன் தொடர்புடைய புதிய புதிய இணைய தளங்களை அறிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.உதாரணமாக Cricket தொடர்பான இணைய தளங்களில் எமக்கு cricinfo வை மாத்திரந்தான் தெரியும் என வைத்துக்கொள்வோம். இந்த cricinfo க்கு ஒத்த சமனான தளங்களை அறிய வேண்டுமாயின், cricinfo என்று googleல் தேடி, அங்கு cricinfo என்ற தளமுகவரிக்கு அருகில் காணப்படும் “similar” என்பதை click செய்வதன் மூலம் cricinfoக்கு ஒத்த இணைய தளங்களை அறிந்து கொள்ளலாம்.

   இந்த வசதி எமக்கு பல புதிய இணைய தளங்களை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய வசதி தொடர்பான உங்கள் கருத்துக்களை எங்களுக்கு சொல்ல மறக்க வேண்டாம்.

We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

Retweet this