Wednesday, June 2, 2010

பாகிஸ்தான் + முகப்புத்தகம் (facebook)



  முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹுவசல்லம்) அவர்களை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களையும் படங்களையும் கொண்டிருந்ததனால் facebook இணைய தளம் பாகிஸ்தானில் கடந்த மாதம் தடைசெய்யப்பட்டது.

  முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹுவசல்லம்) தொடர்பாக நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியை facebook நீக்கியதை  அடுத்து facebook க்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி  Ejaz Ahmed Chaudhry மேலும் கூறுகையில் “மதரீதியில் புனிதமானவிடயங்களை அவமதிக்கும் இணைய தளங்களை சவூதி அரேபியா போன்ற நாடுகள் எவ்வாறு தொழிநுட்ப ரீதியில் தடுக்கின்றதோ, அவ்வாறான System களை உருவாக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார்”

  இப்படியான சமூக வலைத்தளங்களை நல்ல விடயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள். எந்த ஒரு மதத்தையும் கொச்சைப்படுத்துவதற்கு இப்படியான தளங்களை பயன்படுத்த வேண்டாம்.  ஒது எனது பணிவான வேண்டுகோள்.
We love your feedback

what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it .

0 comments: