Friday, April 23, 2010

பதிவர்களுக்கு உதவும் facebook



இன்று அனேகர் நீண்ட நேரம் தரித்துநிற்கும் இணையதளமாக மாறியுள்ள facebook தற்போது புதிய சேவையொன்றினை இணையப் பதிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது ஒரு இணைய தளத்தில் அல்லது வலையில்(Blog) facebook தரும் “like ” button இனை சேர்த்துக்கொள்ள முடியும்.இந்த “like” button இனை click செய்யும்போது அந்த web page or post எமது facebook wallல் update செய்யப்படும் அல்லது பிரசுரிக்கப்படும். இந்த facebook like button மூலம் எமது இணையதளத்திற்கு பிரபல்யமும் வாசகர்களின் வருகையும் அதிகரிக்கும்.



இது எவ்வாறு சாத்தியப்படும் என்று பார்த்தால், இன்று அதிகமானோர் internet பாவனையை ஆரம்பிப்பதே facebookல் தான். ஆகவே எமது வாசகர்கள் “like” button ஐ click செய்வது சாத்தியமே.மேலும் இது ஒரு இலகுவான முறையுமாகும்.ஒருவர் ஒரு பக்கத்தினை “like” பண்ணும்போது அது அவருடைய அனைத்து நண்பர்களினாலும் பார்க்ககூடியதாக இருக்கும். இந்த “like” சங்கிலி நீண்டு கொண்டே செல்லும்.

இந்த "like" button வசதியானது முன்னைய "share" வை விட சுலபமானதாகும்.ஆனால் இதில் காணப்படும் குறைபாடு யாதெனில் ,நாம் “like” பண்ணியுள்ளோமா இல்லையா என்பதை அறிவது கொஞ்ஞம் கடினமானதே. நாம் ஒரு முறை "like"ஐ click செய்தால் அந்த buttonஉடைய நிறம் மாத்திரம் மாறுகிறது,வேறு எந்த அறிவித்தலும் அங்கு இல்லை.ஏற்கனவே "like" பண்ணியவர் மீண்டும் அந்த buttonஐ click செய்யும் போது “unlike” பண்ணப்படும்.


நீங்களும் இந்த buttonஐ சேர்த்துக்கொள்ள இந்த linkஐ click செய்யவும் http://developers.facebook.com/docs/reference/plugins/like 


what next?
1.like it(top of the post)
3.buzz it
3.tweet it
4.bookmark it

0 comments: