Sunday, January 24, 2010

எனது நண்பணின் கனவு.


  நேற்றிரவு நடந்த உரையாடலில் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு கனவு. என்னாப் பெரிசு தெரியுமா. எங்கயோ போய்விட்டான் எண்ட நண்பன். கேட்டால் அசந்துடுவயல். இதுதான் அந்தக் கனவு.

  ஒரு 500 கோடி ரூபா காசி வேணும் இல்லாட்டி குறைஞ்சது 250 கோடி எண்டாலும் adjust பண்ணலாம். அப்பிடியே அந்தக்காச எடுத்து ஒரு வீடு கட்டனும். ஒருவரும் அந்த இடத்தில இருக்கப்போடா. தனியான இடமாக இருக்கனும். ஒருவரும் என்னை தொந்தரவு செய்யப்போடா. free யா நான் இருக்கனும். இப்பிடித்தான் ஆரம்பிச்சான்.

  அவனுக்கு பாட்டுக் கேட்க ஒரு கைக்கு அடக்கமான PLAYER வேணும். நல்ல SOUND ஆக இருக்கனும்.அப்பதான் பாட்டில் ருசி இருக்குமாம்.(:D250கோடி இருக்குத்தானே, வாங்கிட்டா போச்சு :D) அடுத்தது என்ன வென்றால் அந்த வீடு. SIMPLE ஆக ஆனா எல்லா வசதியுடனும் இருக்கவேணும்.ஒரு ROOM மட்டும் விசேடமாக இருக்கனும் என்பதில் தெளிவாக இருக்கான்.. அந்த வீட்டின் முன் பகுதியில ஒரு பூந்தோட்டம் வேணுமாம். நல்ல அழகான மரங்கள் நட வேண்டுமாம். அந்த GARDEN ஐ பாக்கிற மாதிரி ஒரு ROOM வேணும், ஒரு விசயம் என்ன வென்றால் FULL GLASS FITTING.. சிவாஜி படத்தில வந்த சஹானா பாட்டின் அரங்கம் மாதிரி அந்த ROOM இருக்க வேணுமாம். காலையில் எழுந்தவுடன் பேப்பரோட வந்திருந்து அந்தக்காட்சிய பார்த்த படியே பேப்பர் வாசிக்க வேணுமாம். அடிக்கடி அவன் சொன்ன விடயம் என்னவென்றால் “யாரும் இருக்க போடா.. FREEயா இருக்கனும்

குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் கல்யாணம் பண்ணாட்டியும் பிரச்சினையில்லயாம் ஆனா கல்யாணம் பண்ணிக்கு போனால்தான் உனக்கு நல்லது என்று நான் சொல்லியிருக்கன்.அப்பதானே ஒரு கிக் ஆ இருக்கும் எண்டும் சொல்லிருக்கன்.. ஒரு ஆள பாத்து வச்சிருக்கார் அது வேற சங்கதி.

 தொழில் ஒண்டும் தேவையில்லயா என்று கேட்டதற்கு முதலில் தேவையில்லதான் எண்டு சொன்னான், பிறகு இருந்தா நல்லம் தானே எண்டும் ஒரு ஆசை அவனுக்கு. அப்பதான் திருப்தியாக இருக்குமாம் எண்டு ஒரு வியாக்கியாணம்.

இன்னம் இருக்கி.. சொன்ன அடிக்க வந்திருவீங்க என்ற காரணத்திற்காக முடித்து கொள்கிறேன்.. அந்த நண்பனின் பெயர் பசீலுர் ரஹ்மான்.MA(FAZEEL). MA என்பது அவனின் தந்தயின் பெயரைக் குறிக்கிறது.


Bookmark and Share

1 comments:

Ravikanthan,  January 26, 2010 at 11:12 AM  

ha ha nice dream.........