Wednesday, December 30, 2009

இது எல்லோரதும் கடமை(with audio)



                       எங்குட நாட்டில இப்போதைக்கு பரபரப்பான செய்தி என்னவென்றால் "ஜனாதிபதித் தேர்தல்". இது அரசியல் பதிவு என்று நினைக்கவேண்டாம். இன்னம் VOTE பண்ணிய அனுபவம் இல்லாட்டியும் , ஏதோ எனக்கு தெரிந்தது. என்ட மனசில பட்டது. நான் கண்ணால பாத்தது.

                      வாக்களிக்கிறது எங்கிட உரிமை என்டுதான் அனேகமான ஆக்கள் பாக்காங்க but அது எங்களுக்கு இருக்கிற முக்கியமான கடைமை என்டு ஒருவரும் பாக்கிறல்ல. ஒரு இலங்கை குடிமகான எங்களுக்கு இருக்கிற ஒரு பெரிய சொத்து. அந்த சொத்தை செல்லுபடியாக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரதும் கடமை.

                      சின்னச்சின்ன காரணத்திற்காக VOTE போடாம வீட்ட இருந்திர வேணாம்.என்ட நண்பர் ஒருவர், இரண்டு நாளைக்கு முன்னர் CANTEENல சாப்பிடும்போது சொன்னார்
 "VOTE போட வீட்ட போறன்டா 1000/= ரூபாய்க்கு மேல சொலவகும், அதால நான் VOTEபோட போறல்ல" எண்டு

                    எங்கிட உம்மா(அம்மா) சில நேரம் சொல்வார் "வீட்ட நிறைய வேலை இருக்கு அதால VOTE போக யேலா(முடியாது)" என்டு.

                  இப்படியான சின்னச் சின்ன காரணித்திற்காக VOTE பண்ணாம இருந்திர  வேணாம்.ஏதோ என்னால் முடிந்தது. பிழையாக ஏதும் சொல்லியிருந்தால் சொல்லுங்க.

இந்த பக்கத்தையும் பார்த்திட்டு போங்க.
Bookmark and Share


Bookmark and Share

1 comments:

Jaffer December 31, 2009 at 11:51 AM  

nalla muyarchi, innum neraya panna en vazhthukkal..