இவர்கள் மீது கருணை காட்டுங்கள்..please
முன்பு ஒரு தடவையும் இது பற்றிக்கூறியிருக்கிறேன்.தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை ஆனால் பதுளை நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர்(km) தூரத்தில், பசறைக்கு செல்லும் வீதியில் இரண்டாம் கட்டை என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் இருக்கும் தண்ணீர் பற்றி சொல்லித்தானாக வேண்டும்.
சுருக்கமா சொன்னா இஞ்ஞ தண்ணீர் பஞ்ஞம்.மழை காலம் என்பதால தண்ணி வருகுது but குடிக்க முடியாது. ஒரு முறையான நீர் விநியோகம் இங்கு இல்லை.3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை ஒரு TANK தண்ணி தருவாங்க அதைக் கொண்டு குடிக்கிறதா? குளிக்கிறதா? இல்ல மற்றய தேவைகளுக்காக பாவிப்பதா?
அதிகமாக தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்யும் மக்கள் வாழுமிடமிது.பெரிசா படிச்ச சனம் குறைவு.. சில நேரம் இந்த சனங்கள் வீதியோரத்தால போற தண்ணிய எடுத்து குடிக்காங்க. பார்க்க பரிதாபமாக இருக்கும்.
ஆனால் பதுளை TOWN ல தண்ணி இருக்கு.இன்னமொரு விஷயம் அதே 2ம் கட்டையில் அமைந்துள்ள எங்களுடைய CAMPUS லயும் இருக்கு. ஒவ்வொரு நாளும் CAMPUSல தண்ணி இருக்கும்.
பொறுப்பான அதிகாரிகளின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கு: MICROSOFT
5 comments:
மிகுந்த நன்றி
உங்கள் சமூக அக்கறைக்கு அங்கு பதுளையில் மட்டுமல்ல தோட்ட மக்கள் வசிக்கும் பல பிரதேசங்களில் இதுதான் நிலைமை
இந்த மக்களின் பிரச்சனைகளை உருப்படியாக எவர் வந்து தீர்க்கப் போகிறார்களோ? நானறியேன்!
ம்ம்... என்ன சொல்வது?
நீங்கள் சொல்வது சரிதான் தர்ஷன். இதற்கு தீர்வில்லையா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
///இந்த மக்களின் பிரச்சனைகளை உருப்படியாக எவர் வந்து தீர்க்கப் போகிறார்களோ? நானறியேன்!///
நானும் அறியேன் முகுந்தன்
Post a Comment