Monday, May 12, 2008

கொழும்பு நகர சுத்தி வந்து பாருங்க


இப்பதான் கொஞ்ஞ நாளக்கி முன்ன நான் கொழும்புக்கு
போயிருந்தன்....கொழும்பு எனக்கி பெரிசா பழக்கம் இல்ல.....
அதென்ன நாகரீகத்துட உச்சக்கட்டமா இல்ல பழகின
விதமா இல்ல உலகம் சீர் கெட்டு பெய்த்தா...நான் இப்பதான்
இத பாத்திருக்கலாம்..இடு கன நாளா நடந்து வரலாம்..ஆனா
நெடுநாளா ஒரு பிழையான விசயம் நடந்து வந்தா அது சரி
என்டில்லானே..
பொது இடம் என்கிற அடக்கமே இல்ல.......அது மனச
சஞ்சலபடுத்து.Bus என்டும் இல்ல Zoo என்டும் இல்ல..Beach
என்டும் இல்ல..வேற இடங்கள குறிப்பிட்டு சொல்ல தெரியா..
கஷ்டமா இருக்கி.....ஒரு சராசரி இளைஞ்ஞனா,வேற வேற
எண்ணங்கள் வருகுது..விளக்கமா சொல்ல தேவல்லதானே...
இதெல்லாம் ஏன் சொல்றன் என்டா,இந்த செயல்கள
பாத்து நம்புட சகோதரங்கள் கெட்டு பெய்திருவாங்க...தமிழ்
பேசுற மக்களான எங்களுக்கு இது புதிசி தானே......குறிப்பா
சொன்னா வட கிழக்கு மக்களுக்கு......என்னயும் சேத்துதான்
சொல்றன்.....
கொழும்பு நகரத்த நோக்கி எங்கள் மாணவர்கள் அதிகமா
இப்ப போறாங்க..உயர் தரமா இருக்கட்டும் பல்கலைக்கழகமா
இருக்கட்டும் பல விதமான பாடநெறிகளும் கூட..இவர்கள்
இத பாத்து நாமளும் இப்பிடி இருக்கலாம் என்டு நினச்சா
நிலமை கவலைக்கிடம் என்கிறத்துல எனக்கி சந்தேகம் இல்ல.
இப்ப இருக்கிற ஆக்கள திருத்த இயலா என்டாலும்
புதுசா போறாக்கள் இதுல விளாமலுக்கு இருக்க, ஆற்றல்
இருக்கிற மக்கள் அல்லது அனுபவசாலிகள் அல்லது உரிய
பெற்றோர்கள் ஏதாலும் செய்ய வேண்டும்....
சந்திப்பம்...........

2 comments:

S.Lankeswaran May 12, 2008 at 10:24 PM  

என்ன நண்பரே!
தங்களுக்கு எந்த இடம்?
இன்றைக்கு எமது செய்மதித் தொலைக்காட்சிகள் காட்டாததையா நீங்கள் கொழும்பில் பார்த்து விட்டீர்கள்?

இதெல்லாம் சகஜமப்பா. ஓடுற தண்ணியில நாமலும் சேர்ந்து உருண்டு ஓடி சரியான இடம் வரும் போது கரையேர வேண்டியது தான். இல்லை என்று வீம்பு பிடித்து கொண்டிருந்தால். காட்டாறு நம்மளையும் சேர்த்தல்லவ இழுத்து சென்று கடலில் கரைத்து விடும்.

farzan abdul razeek May 14, 2008 at 1:58 PM  

இப்போதுதான் உங்கள் பதிவின் பக்கம் வந்தேன். இன்னும் உரையாட வேண்டி இருக்கிறது.

visit:
http://farzanpirathihal.blogspot.com/
http://addalaichenai.blogspot.com