Wednesday, May 7, 2008

தென்கிழக்கு வளாகம்



என்னடா தலைப்பு இது என்டு யோசிக்கயலா?
யோசிக்கிற அளவுக்கு ஒன்டும் இல்ல என்டு சொல்ல
மாட்டன்..நாம எல்லாரும்(குறிப்பா அம்பாரை மாவட்ட
மாணவர்கள்) ஒலுவில் வளாகம் என்டு சொல்ற தென்கிழக்கு
பல்கலைக்கழகம் தொடர்பாத்தான்.....

நான் சொல்லப்போறது யுனிவசிட்டிய பத்தியில்ல..
அங்க படிக்கிற,படிச்ச,படிக்க போற மாணவர்கள் தொடர்பாத்தான்.
இன்னம் சொல்லப்போனா அங்க படிக்க தகுதியில்லாத அல்லது
றிசல்ஸ்(பெறுபேறு)காணாத கனவான்கள் மற்றும் யுனிவசிட்டிய
கடந்து போற எங்கட சகோதரங்கள் தொடர்பாத்தான்....

ஒரு பிள்ளயே தனது தாயப்பத்தி பிளையா கதச்சா நல்லாவா
இருக்கும்...அப்பிடி கதக்குறது சரிதானா..அப்பிடி பிளையா இருந்தாலும்
அத சரிசெய்றதுதான் ஒரு நல்ல பிள்ளக்கி அழகு..இல்லயா...அங்கதான்
படிச்சி பட்டமும் பெற்றிருப்பாங்க ஆனா பாருங்க,நாம போய் "நான்
யுனிவசிட்டிக்கு எடுபட்டிருக்கன்.எப்பிடி இந்த அப்ளிகேசன் நிரப்புற
என்டு கேட்டா...எங்கயாலும் போங்க ஒலுவில் வேணாம் எங்கிற ஆக்கள்தான்
இருக்காங்க...பொய்யில்லங்க எனக்கி நடந்ததுதான்...அப்பிடி என்ன குறை..
அப்பிடி மோசமா???கொஞ்ஞம் சொல்லுங்க

இப்ப படிக்கிறவிய ஒரு படி மேல போய் கலவன் பாடசாலை
என்கிறதும் ஓதப்பள்ளிக்கூடம் என்கிறதும் களியோட ஸ்கூல் என்கிறதும்
கேக்கிறதுக்கு கஷ்டமா இருக்கி...உண்மைய சொல்லப்போன அவங்க
போய் 09 மாதம்தான் இருக்கும்..ஒரு சீனியர் சொன்னா "வந்து பாருங்க,
ஏன் வந்தம் என்டு இருக்கும் என்டு"....

அதெல்லாம் விடுங்க ஒரு சில ஆசிரியர்கள் அத விட ஒரு
படி மேல போய் J எங்கிற எழுத்தே form ல இருக்கப்போடா எங்காங்க...

இந்த விஷயங்கள் உண்மதானா??இல்ல,கிட்ட இருக்கிறதால
பெறுமதி விளங்கல்லயா....

மாணவர்கள் இப்படி சொல்ல காரணம் என்ன?? பல்கலைக்கழக
நிர்வாகம் என்ன பதில் சொல்றயல்....

1 comments:

ஃபஹீமாஜஹான் May 14, 2008 at 10:41 PM  

அஸ்பர்

ஒலுவில் வளாகம் தென்கிழக்குக்குக் கிடைக்கப் பெற்ற மிகப் பெரியதொரு அருட்கொடை.

அது இப்படியா தன்னைச் சிதைத்துக் கொள்ள வேண்டும்?

ஒரு தடவை நுஃமான் சேர் வருகை தரும் நாளொன்றில் அவரைச் சந்திக்க எனது விரிவுரையாளருடன் அங்கு சென்ற அனுபவம் உள்ளது.அந்த நிறுவனம் பற்றிய பெரிய பெரிய எதிர்பார்ப்புகளுடன் அங்கிருந்து திரும்பினேன்.

அண்மைய நிகழ்வுகள் அனைத்தையும் பொய்யாக்கிவிடுமா?

உங்கள் பதிவை தன்னம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள்.

"கலவன் பாடசாலை
என்கிறதும் ஓதப்பள்ளிக்கூடம் என்கிறதும் களியோட ஸ்கூல் என்கிறதும்"

அந்த "ஓதப்பள்ளிக்கூடம்" இற்கு நீங்களும் போய்ச்சேர வாழ்த்துகிறேன் :)