We care always
எமது நாட்டில் காணப்படும் பிரபல்யமான செல்பேசிச்
சேவை இது..smart என்று சொன்னால் எல்லாருக்கும்
தெரியும்.இது நான் அனுபவித்த அல்லது உணர்ந்த
விடயம்....சொல்லப் போனா Smart பாவிக்கிற ஆக்கள்
அனுபவிக்கிறதுதான்...
என்னென்டா விசயம்,நாம செல்பேசிய பாவிக்கம்
தானே அதுல எவ்வளவோ புதிய வசதிகள் சேவை
வழங்குனர்களால் அறிமுகப்படுத்தபடுகிறது..
அதையும் விட சில சந்தேகங்கள
தீர்க்க வேண்டியிருக்குது..இதுக்காக நாம வாடிக்கையாளர்
சேவை நிலயத்திற்கு அழைக்க வேண்டியிருக்கு..
இப்படியெல்லாம் இருக்க இந்த M வா.சேவைக்கு எடுத்தா
அவங்க அத ஏற்றெடுப்பாங்களா எங்குற சந்தேகம்
ஒவ்வொரு முறயும் வருகுது..(எனது பிரதேசத்தை
அடிப்படையாக கொண்டு) ஏனென்டா அப்பிடி சுணக்கம்..
2, 3 நிமிடம் என்டா பரவாயில்ல..7, 8 நிமிடம் ஏன் 10
நிமிடத்துக்கு மேலயும் போகுது....
இதெல்லாத்தயும் விட நாம அப்பிடி காத்திருந்து
அவங்களுக்குட்ட கதைக்கம் என்டு வைங்கொளன்,
அங்க பல சேவையாளர்களுக்கு உரையாடவே தெரியா
என்டு சொல்லலாம்.ஏதோ அடிக்கிற ஆக்கள்
மாதிரி கதக்காங்க..பயமா இருக்கி..கொஞ்ஞம் கனிவா
இருந்தாத்தான் என்ன...அவர்களுடய பிரதான
போட்டியாளர மாதிரி...இன்னம் சொன்னா
அப்பிடி ஒரு அவசரம் அவங்களுக்கு..தடார் என்டு cut
பண்ணிருவாங்க.
வேகமா வழர்ந்து வாற நிறுவனத்துக்கு இது நல்லம்
இல்ல என்டு நினக்கன்..பிழை எண்டா மன்னிக்கவும்....
சந்திப்பம்.........
1 comments:
அன்பின் அஸ்பர்,
இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூ பார்த்தேன்.
பேச்சு நடையில் எழுத்து அபாரம்.
மிக அருமையாக உள்ளது.
வாழ்த்துக்கள் நண்பா.
தொடர்ந்து எழுதுங்கள்.
Post a Comment