Wednesday, May 21, 2008

ஏன் இந்த நடைமுறை


எல்லோருக்கும் தெரியும் பாடசாலை நாட்கள்ள
அதிகமா எங்களையும் என்குட ஆசிரியர்களையும்
பாக்க அல்லது பரிசோதிக்க கல்விக்காரியலயத்தில
இருந்து அதிகாரிகள் வருவாங்க..அத பத்தித்தான்
இந்த பதிவு.....

ஏன் இப்பிடி ஒரு நடைமுறை எண்டு எனகெண்டா
தெரியா..நாங்க செய்ற ஒப்படைகளா இருக்கட்டும்
SBA பேப்பரா இருக்கட்டும் எல்லாத்தையும் வாங்கி
ஒரு file ல போட்டு அலுமாரியில வச்சிடுவாங்க..
ஏன் தெரியுமா இந்த மேல் அதிகாரிகளுக்கு
காட்டுவதட்க்கு..உண்மையச் சொன்னா,அதிகமா
அத நாங்க வாசிச்சிருக்கவே மாட்டம்..
ஒரு கிழமெக்க அத செஞ்சி காட்டி மார்க்ஸ்
எடுக்குற அவசரத்துல....அதுலயும் group
Assignment எண்டா முழுசா பாக்கிரதே
கஷ்டம்..

நீங்க ஒரு மாணவனா இருந்த
நாட்கள வெச்சி யோசிச்சிபாருங்க..நான்
exception case a சொல்லல...ok.......எல்லாராலையும்
முடியாதுங்க ...

மதிப்புகுரிய கல்விப்பணிமனை அதிக்காரிகளே
நீங்க அப்பிடி காட்டாயமா பாக்க வேணும்
எண்டு கேக்கயலா...ஏன் என்குட ஆசிரியர்களுடைய
பதிவுகள நம்பமாட்டயலா...நம்பிக்கை இல்லண்ட
நீங்க அறிவிக்காமலுக்கு வந்து டெஸ்ட் பண்ணுங்க
அப்பதான் நீங்க ஒன்குட கடமைய சரியா
செய்ரயல் எண்டு எடுக்கலாம்..இன்னம் ஒண்டு.. ஏன்
ஒங்கள கண்டு ஆசிரியர்கள் அப்பிடி பயப்புர்றாங்க .
சில நேரம் லீவ் ம் எடுக்காங்க.....

மதிப்புக்குரிய ஆசான்களே,ஏன்
இந்த பயம்?நீங்க ஏன் அவங்களுக்கு
காட்ட வேண்டிய பதிவுகள அல்லது
அறிக்கைகள அவங்க வாறதுக்கு முந்தின
நாள் தானா செய்யணும் ...

இப்பிடியான செயல்கள் என்னை A/L படிக்கும்போது
கடுமையா பாதிச்சது...பிழையா ஏதும்
கேட்டிருந்தால் தயவு செய்து மன்னிக்கவும் ...

சந்திப்பம் ........

0 comments: