விளக்கம் வேண்டும்
பல்கலைக்கழக தெரிவு என்பது எமது மாணவர்களின்
இருக்கிறது என்டு சொன்னா...நானோ நீங்களோ
மறுக்க முடியாது....கிட்டத்தட்ட 2 1/2 வருடங்கள்
கடுமையாக படித்ததன் பயன்தான் இந்த பல்கலைக்
கழக தெரிவு....நமது நாட்டிலே அடிக்கடி பல்கலைக்
கழகங்களில் புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டு
வருகின்றது...கடைசியாக 2007 ஆண்டு 10 பாடநெறிகள்
அறிமுகப்படுத்தப்பட்டது....இதபத்திதான் ஒரு விசயத்த
சொல்லலாம் என்டு வந்திருக்கன்.......
இப்படி அறிமுகப்படுத்தர்ர பாடநெறிகள் சராசரியா
4 வருடங்கள் கொண்ட பாடநெறியாக இருக்கி.இப்படியான
புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்திற எங்குட பல்கலைக்
கழக மானியங்கள் ஆணைக்குழுவானது, இந்த பாடநெறிகள்
தொடர்பான விளக்கங்கள தராமல் விடுவது எவ்வளவு
பாரதூரமான விடயம் என்டு மாணவர்களுக்கிட்ட
கேட்டா சொல்லுவாங்க....
தொடர்ந்து 4 வருடம் படிக்கிற பாடத்த தெரிவு
செய்யும் போது அது தொடர்பான விளக்கங்கள் பற்றி
அறிய வேணும் என்கிறது பிழையில்லதானே...4 மாதம்
கொண்ட பாடத்த படிக்க சேரும்போதே எவ்வளவு விசயத்த
கேக்கம்.....ஆனா இது 4 வருடம்..............இப்பிடி சொல்லாம
விர்ரதால நாம என்ன படிக்கப்போறம் என்டு தெரியாமலேயே
மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள அனுப்ப
வேண்டியிருக்கு.....இதனால சில மாணவர்கள் இடையில
இந்த பாடநெறிய விட்டு விலகுற நிலமையும் ஏற்பட்டிருக்கி.
இந்த விளக்கங்கள எல்லாருக்கும் தெரியப்படுத்தாட்டியும்
பரவாயில்ல ஆனா தேவப்பர்ர ஆக்கள் பெற்றுக்கொள்ள
கூடியவகையில ஏதாவது செய்ய வேணும் தானே.......
உதாரணமா பேப்பர்லா போடுங்க என்டு சொல்லல்ல
அவர்களுடைய இணையதளத்திலயாலும் சேக்கலாம் தானே..
அந்த விண்ணப்பம் வாற புத்தகத்தில 2 வரியில சொல்றத்த
விளக்கம் என்டு சொன்னா நான் ஏற்க மாட்டன்...
இந்த விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் சரியான
நடவடிக்கைகள் எடுக்கனும் எங்கிறதுதான் என்னுடைய
விருப்பம்.........
சந்திப்பம்.........
2 comments:
சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் அஸ்பர்..
ஒவ்வொரு பாடநெறிக்குமான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் விண்ணப்பங்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உங்களுக்கு வந்த இந்த எண்ணம் வரவேண்டியவர்களுக்கு வந்திருந்தால் இவை எப்பொழுதோ சீர் திருத்தப்பட்டிருக்கும்.
நல்ல விடயங்கள் எழுதுகிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
சரியாக சொன்னீர்கள் நண்பரே ஒரு கற்கை நெறியினை கற்பதற்கு தேவையான தகுதிகளை மாத்திரம் கூறுகிறார்களே தவிர அது தொடர்பான மேலதிக விளக்கங்கள் யாருக்கும் தெரியவில்லை அந்த கற்கை நெறியினை கட்பதனால் ஏற்படும் நன்மைகள் வேலை வாய்ப்புக்கான துறைகள் என்பன பற்றி கூறலாம் குறிப்பாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கற்கை நெறிகள் தொடர்பாகவாவது கூறியிருக்கலாம் இதை பத்திரிகைகளில்தான் கூற வேண்டும் என்பதில்லை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில்லாவது கூறி இருக்கலாம் இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் அது மட்டும் அல்ல அஸ்பர் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்குவதில் ஏற்படுகின்ற கால தாமதம் மிக அதிகமானது உங்களுக்கே தெரியும் இவ்வருடம் உயர்தர பெறுபேறுகள் வந்தது ஜனவரி மாதம் 1 ம் திகதி ஆகும் ஆனால் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டது 6 ம் மாதம் இந்த கால தாமதம் இன்று நேற்று மட்டுமல்ல காலம் காலமாக இதுதான் நடந்து வருகின்றது இதே வேறு ஒரு நாட்டில் ஒருவன் சராசரியாக 22 வயதில் இளமாணிப்பட்டம் பெற்று வேலைக்கு செல்கிறான் ஆனால் நம் நாட்டில் ஒருவன் இளமாணிப்பட்டம் முடிக்க வேண்டும் எனில் அது 24 அல்லது 25 வயதில் தான் சாத்தியம் ஆகின்றது
உங்கள் அதிருப்திகள் எங்கள் அதிருப்திகள் தொடருங்கள் நண்பரே
Post a Comment