Tuesday, June 3, 2008

என் இனிய தமிழ் மக்களே


குறிப்பு: கூவித்திரியுறன் என நினக்கொன்னாம்..
ஊக்கப்படுத்துவம் என்கிறதுதான் எனது
நிலைப்பாடு.....

இந்த நாட்களில் நான் இணையத்தில்
உலாவரும் போது தோன்றிய ஒன்றைப் பற்றி
நான் சொல்லலாம் என நினக்கன்..இன்னம்
சொன்னா வருத்தப்பர்ர விடயம்....

தனது எண்ணங்கள்,ஆக்கங்கள்,எதிர்பார்ப்புகள்
தேடல்கள்,ரசனைகள்,உணர்வுகள் இப்படி பல்வேறு
விடயங்களை எமது நண்பர்கள் பகிர்ந்து
கொள்றாங்க..அதனை படிப்பவர்கள் தங்களது
கருத்துக்களை விமர்சனங்களை பதிவு செஞ்சி
பதிவு செஞ்சுக்கும் வாறாங்க.....அங்கதான் எனக்கி
சின்ன ஒரு வருத்தம்....

நீங்க வேணுமெண்டாலும் பாக்கலாம்..அந்த
விமர்சனப்பகுதியில் வரும் விமர்சனங்கள்
இன்னொரு பதிவாளராலான் அதிகமா சேர்க்கப்
படுகுது....ஒரு தனிப்பட்டவரின் மின்னஞ்ஞல்
முகவரியிலிருந்து கருத்துக்கள் சேர்க்கப்பட்டதை
நான் கண்டதே இல்ல(நான் பார்த்தமட்டில்)......
இன்னம் ஒன்டு அப்பிடி கருத்துக்கள பகிர்ந்து
கொள்ளும் பதிவாளர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லை
க்குள்ளான் இருக்காங்க..சுத்திச் சுத்தி 10....20.....
தளங்களுக்குள்ளான் இருக்காங்க.........

இணைய பாவனையாளர்களுக்கு நான் விநயமா
கேட்கிறது என்னென்டா,நீங்க தளங்களை பார்வையி
டும் போது அங்கு இருக்கிற பதிவுகள் கருத்துக்கள
வேண்டி நிற்கும் போது தயவு செய்து நீங்க ஏதாலும்
சொல்லுங்க...குறைஞ்ஞது "சரிதான்..இல்ல இது
பிழை அல்லது நல்லா இருக்கு" என்டாலும்
எழுதுங்கோ...நீங்க அப்பிடி எழுதும் போதுதான் அந்த
பதிவாளர் நல்லது நால சொல்லுவார்..சில
பதிவாளர்கள் கருத்துக்கள எதிர்பாக்காட்டியும் பல
பதிவாளர்கள் எதிர்பாக்காங்க.....

நமது கருத்து இன்னொருவரால அங்கீகரிக்கப்
படுவது தெரியவரும் போது எப்பிடியான சந்தோசம்
வரும் எண்டு நமக்கு நல்லா தெரியும்..சிரமம்
பாராது இந்த விடயங்களில் கவனம் செலுத்தவும்..

சந்திப்பம்......

3 comments:

M.Rishan Shareef June 3, 2008 at 12:58 PM  

//இணைய பாவனையாளர்களுக்கு நான் விநயமா
கேட்கிறது என்னென்டா,நீங்க தளங்களை பார்வையி
டும் போது அங்கு இருக்கிற பதிவுகள் கருத்துக்கள
வேண்டி நிற்கும் போது தயவு செய்து நீங்க ஏதாலும்
சொல்லுங்க...குறைஞ்ஞது "சரிதான்..இல்ல இது
பிழை அல்லது நல்லா இருக்கு" என்டாலும்
எழுதுங்கோ...நீங்க அப்பிடி எழுதும் போதுதான் அந்த
பதிவாளர் நல்லது நால சொல்லுவார்..சில
பதிவாளர்கள் கருத்துக்கள எதிர்பாக்காட்டியும் பல
பதிவாளர்கள் எதிர்பாக்காங்க.....//

சரியாகச் சொன்னீர்கள் அஸ்பர்.
ஒவ்வொருவரும் சக கலைஞரை,எழுத்தாளரைத் தட்டிக்கொடுக்க வேண்டும்.அந்தத் தட்டுதல் என்பது வெறுமனே பாராட்டுக்களோடு நின்று விடாமல் சம்பந்தப்பட்டவரின் ஆக்கத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
அது சம்பந்தப்பட்ட கலைஞனை,எழுத்தாளனை மிகவும் ஊக்குவிக்கும்.

அடுத்ததாக ஆக்கத்துக்குச் சொந்தக்காரனும் தனது குறையை இவர் சுட்டிக்காட்டினாரே என்று கோபம் கொள்ளாமல் திருத்திக்கொள்ள வேண்டும்.

இறக்குவானை நிர்ஷன் June 3, 2008 at 2:16 PM  

ரிஷானின் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன்.

farzan abdul razeek June 5, 2008 at 10:09 AM  

பல தடைவகள் நானும் நண்பர்களும் கதைத்த விடயம். ஆனால் சும்மா எழுதிவிட்டுப் போவதை எவ்வாறு ஏற்பது அஸ்பர்.
உரையாடல் நியாயமானதாகவும் அமைய வேண்டும் இல்லையா?

போகிர போக்கில் உலாவித்தரிபவர்களே இன்று இணையத்தில் அதிகமாய் இருக்கிறார்கள் போல் கிடக்கு. மேலோட்டமான வாசிப்பின் சாபமே இது என நினைக்கிறேன்.

www.farzanpirathihal.blogspot.com
www.yenathulaka.blogspot.com