யார் புத்தி சாலி? நாங்களா அல்லது அவர்களா
ஒரு சிறிய இடைவெளியின் பின்னர் பதிவுகளுடன் நான். எனக்கு இப்போதைக்கு பிடித்திருக்கும் யோசனை. இன்று வரைக்கும் படித்துக் கொண்டிருக்கும் நாங்க(நான்) மடையனா அல்லது 5 வருடத்துக்கு முன்னரே படிப்பை நிறுத்திக் கொண்டு தொழில் செய்ய ஆரம்பிச்ச எனது நண்பர்கள் புத்திசாலியா.சிலர் O/L வரைக்கும் படித்தார்கள் பலர் A/L வரைக்கும் படித்தார்கள். நாங்க 2,3 பேர்தான் படிக்க எண்டு சொல்லி ஊரை விட்டு வெளியேறினாக்கள்.
நாங்க இன்னமும் தாய் தந்தையில் தங்கிவாழ்வோர் தொகையிலான் இருக்கம். ஆனா இந்த புத்தகமும் தேவையில்ல ஒரு மண்ணும் தேவல்ல எண்டு போனவர்கள், சொந்தமா வாகனத்தோட இருக்காணுகள். அதற்காக படிக்கிறது பிழை எண்டு சொல்லவில்லை நான், ஏதோ மனதில தோன்றியது.
கஸ்டமா இருக்கி. எப்ப நாங்க உழைத்து , எப்ப எங்குட தாய் தந்தைக்கு கொடுத்து. அந்தக் காசில ஏதாவது வாங்கி. எவ்வளவோ கனவுகள் இருக்கு. வைரமுத்து மாதிரி, படிப்பு படிச்சுக்கிட்டே பணம் அனுப்ப முடியுமா எங்களால.
நீங்களும் இப்படித்தானா? அல்லது இந்தக் கவலையே இல்லையா? ஏதும் அறிவுரை கூற வேண்டும் போல உள்ளதா? தாராளமா சொல்லலாம்
3 comments:
Job Udan Business pandravan than Buthisali
பொதுவாக படிக்கும் இளைஞர்களுக்கு இருக்கும் மனக்குறைதான் இது..! எனக்கும் இது இருக்கிறது. பல இளைஞர்களுடன் பேசிப்பார்த்திருக்கிறேன். அவர்களுக்கும் இருக்கிறது.
படிக்கிற காலத்தில் வீடுகளில் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள் (பெரிய பொறுப்புகள் இருந்தாலே தவிர). அதனால் இந்தக் கவலையை விட்டு விடுங்கள். எந்த இலட்சியத்தில் படிக்க வந்தோம் என்று யோசித்தால் இது ஒரு பிரச்சினையேயில்லை என்பதை மனது சொல்லும். அவர்களது நிலையில் இருந்திருந்தால் அந்த இலட்சியங்களை அடைய முடியாதல்லவா?
சம்பாதிப்பதும், காரில் செல்வதும் மட்டும்தான் வாழ்க்கையல்ல. மற்றவர்களுக்காகவும், சமூகத்திற்கும் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது.
we are same...... neenka en inam....
Post a Comment